Tuesday, January 07, 2020

On Tuesday, January 07, 2020 by Tamilnewstv in ,    
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும்

திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்

பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி

திருச்சியில் இன்று (ஜன.07)  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா,பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ.சஃபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும்,  நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:

அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக  மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட  கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும்  மோடி அரசு கூறியுள்ளது.

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய  அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக  தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம்  தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள்,  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு  எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:

மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும்,  ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08)  நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:

முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்

பேட்டி .....
நெல்லை முபாரக்

0 comments: