Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில்  கனரா வங்கி அதிகாரிகள் சங்க  பொதுச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார்.


முன்னதாக அவர்  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை  என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

0 comments: