Tuesday, February 25, 2020

On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், லங்கோரா பகுதியைச் சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜபுரோகித். (34).

இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஜம்மு விமான நிலையத்திலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை இவர் தொடங்கினார். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, வழியாக தமிழகம் வந்துள்ளார்.
 இந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த அவரை திருச்சியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தனர். 12 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கத்தோடு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பேட்டி: பிரதீப்குமார்

0 comments: