Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய  பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

உயரமான கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை படுத்தப்படுகிறது.
 இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.  இதேபோல்  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

0 comments: