Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
துபாய் சென்று திரும்பிய 400 மேற்பட்ட நபர்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுமா?



திருச்சி:
துபாய் சென்று திரும்பிய 400 மேற்பட்ட பேர் கரோனா பரிசோதனை இன்றி  மக்களுக்கு அன்னதானம் வழங்குவதால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற போலி மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 இந்த நிறுவனத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்கள் காரணமாக இந்நிறுவனம் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக அழகர்சாமி என்கிற ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகியோர் அறம் மக்கள் நல சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இச்சங்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை செய்து வருகின்றனர். எல்பின் நிறுவனம் மூலம் மோசடியாக சுருட்டப்பட்ட நிதியை இச்சங்கம் மூலம் செலவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த வகையில் எல்பின் நிறுவனத்தில் செயல்பட்டு வரும்  400 மேற்பட்ட பேர் துபாய் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும்  400 மேற்பட்ட பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த 3 ஆம் தேதி  துபாய் சென்றனர் பின்னர் 9,  ஆம் தேதிகளில் துபாயிலிருந்து திரும்பினர். அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு சமீபத்தில் நாடு திரும்பினர். இவர்கள் புறப்பட்டு சென்றது முதலே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. துபாய் சென்று வந்த இந்த 400 மேற்பட்ட பேருக்கும் இதுவரை கொரோனா குறித்த பரிசோதனை நடைபெறவில்லை. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலமாக தான் இந்தியாவிற்குள், குறிப்பாக தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம், கோவை, மதுரை விமான நிலையங்கள் வழியாக வந்த பயணிகளின் விவரங்களை தமிழக அரசு சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த எல்பின் நிறுவனம் மூலம் துபாய் சென்று திரும்பியவர்கள் இதர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி தற்போது தமிழகத்திற்குள் வந்துள்ளனர். இவர்கள் யாரும் இதுவரை கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்குவதாக அவர்கள் நடத்தும் அறம் டிவி.யில் செய்தி வெளியாகியுள்ளது. தெரு ஓரம் வசிக்கும் மக்களை தேடிச்சென்று உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



ஆனால் இவர்கள் அரசு விதிமுறைகளுக்கு மாறாக கூட்டத்தை கூட்டி அன்னதானம் வழங்கி வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் கூட்டத்தை கூட்டி அன்னதானம் வழங்குவது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.  இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆட்சியர் சிவராசு, அன்னதானம் வழங்க கூட்டத்தை கூட்டக் கூடாது என்றும், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களிலும் கூட்டம் கூட்டி அன்னதானம் நடத்தக்கூடாது. தெரு ஓரங்களில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் தேடிச்சென்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு உத்தரவுக்கு மாறாக இவர்களின் அன்னதானம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குவது நல்ல விஷயம் என்றாலும், கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் பரவும் சமயங்களில், அரசு உத்தரவை மதித்து நடப்பது அனைவருக்கும் கடமையாகும். அதனால் அரசு விதிகளை மீறி மக்களை கூட்டி அன்னதானம் வழங்கி தொற்றுநோய் பரவ வாய்ப்பை ஏற்படுத்தும்  சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

( முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் கையுறை அணியாமல் உணவு துபாய் சென்று வந்த எஸ்ஆர்கே ரமேஷ்குமார் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைக்காமல் உணவு பரிமாறுகின்றனர்)


( அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் 400  நபர்கள் இவர்கள் தொடர்பில் உள்ள நபர்களை வரிசைப்படுத்தி இதனால் வரை யார் யாரிடம் தொடர்பு உள்ளவர்கள் என்று அறிந்து பரிசோதித்து தொற்று பரவாமல் மத்திய அரசு மாநில அரசு இதற்கு உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்)

இந்த செய்தியை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களுக்கும் ட்விட்டர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது

இவர்களினால் இவர்கள் தொடர்பில் உள்ள மற்றும் அவர்கள் தொடர்பில் உள்ள எத்தனை பத்திரிக்கையாளர்கள் ஊடகவியல் நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

0 comments: