Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24

திருச்சி மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதிகள் இன்று முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கொரனவை  கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைச்சாலை உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை கைதிகளை விடுவிப்பதற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
சுமார் 800 விசாரணைக் கைதிகளும், 600 தண்டனை கைதிகளும், 200 குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணைக் கைதியாக உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 125 நபர்கள் இன்று  முதல் கட்டமாக
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  இதேபோல பெண்கள் சிறைச்சாலையிலிருந்தும் பெண் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை கைதிகள் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.

0 comments: