Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
நிலவிவரும் கொரானா தொற்று காரணமாக  மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் செயலில் வர உள்ள நிலையில் கை சுத்திகரிப்பான் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 100 மிலி கை சுத்திகரிப்பான் சராசரியாக 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்கள் வாங்கி பயன் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறையின் தொழில் முனையமான  ஹீபர் ஹைஜீன் என்டர்பிரைசஸ் (HHy) இன்று கல்லூரியின் 14 தத்து கிராமங்களில் ஒன்றான மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள குமாரவயலூரில் மக்களுக்கு இலவசமாக கை சுத்திகரிப்பான் விநியோகித்து. வேதியல் துறைத் தலைவர்  முனைவர். பிரின்சி மெர்லின் அவர்கள் கை சுத்திகரிப்பான்பயன்படுத்தும் முறையை செய்து காட்டினார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரதிகள் வழங்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட இந்த தயாரிப்பு 2 வகைகளில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.  எத்தில் ஆல்கஹால் அடிப்படை கொண்ட வகை ஒன்று, மற்றொன்று ஐசோ ப்ரோப்பைல் ஆல்கஹால் கொண்டது. இரண்டு தயாரிப்புகளிலும் கைகளை பாதுகாக்கவும், ஈரப்பதம் கைகளிலிருந்து குறையாமல் வைக்கவும் கிளிசரின் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பானாக ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கப்பட்டுள்ளளது. எந்தவித தேவையற்ற மணம் மற்றும் நிறக்கூட்டுவான் கலப்படமில்லாமல் WHO வின் பரிந்துரைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பான் குறிப்பாக குமாரவயலூர் இல் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயாபரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

0 comments: