Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு

 ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர்  ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

0 comments: