Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 16

திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்.

தற்போது 
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 40நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 43நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களின் ரத்த பரிசோதனை பெறபட்டு 
32பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை 
9மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர். 
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் பழங்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் கைகளை தட்டி விடை கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்த அவர்களது வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தபவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனைக்கு பின்னர் வழக்கமான பணியில் ஈடுப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்.

0 comments: