Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 05

திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர்  தனியார் கல்லூரிக்கு இடம்  மற்றப்பட்டனர்.

   
திருச்சி அரசு மருத்துவமனையில்  உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த  67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

0 comments: