Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 05

கொரோனா அறிகுறி உள்ள 50 க்கு மேற்பட்ட
பகுதிகளுக்கு அதிகாரி சீல் வைக்கும் பணியை துவக்கினர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 நபர்களுக்கு கொரனா நெற்று இல்லை என அறிக்கை வரப் பெற்றுள்ளது. மீதம் உள்ள 67 பேருக்கான
ரத்த பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் திருச்சியில் மாநகரத்தில் உள்ள  தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாளையம்பஜார், பீமநகர், அண்ணாநகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான் ஆகியவை. அதேபோல் மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர்,  சமயபுரம், கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மேலும், திருச்சி மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களை சுகாதார துறை கண்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட இடங்களை சீல் வைத்து ஆட்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி  அப்பகுதிகளில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் சுகாதரத்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சீலிட்பட்ட பகுதிகளில் உடனே கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்து வருகின்றனர் .மேலும் அப்பகுதியை முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

0 comments: