Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப்ரல் 5

திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை,
மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269  கடைகள்
செயல்பட்டு வருகிறது.

எனவே நாள்தோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர்.  அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா  தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
 கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது.  காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த கிருமிநாசினி சுரங்கம் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள்  இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் மேலும் 10 இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.


0 comments: