Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
AINBOF பொதுச் செயலாளர் G.V மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 

திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக புயல் நிவாரணத்தில் இருந்து தற்போது ஊரடங்கு உத்தரவு வரை பொது சேவையில் சமூக நலத்தில் அக்கறை கொண்டு உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது


தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள்  பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு

பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்



அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம்  சார்பாக சத்திரம் பேருந்து நிலையம்  அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்

இந்நிகழ்வை கனரா வங்கி மேலாளர் அம்மா பேட்டை கிளை அக்பர் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன்  விஜயலட்சுமி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் செய்தி தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்

0 comments: