Wednesday, April 15, 2020
On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக . உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்தும்தடைசெய்யப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த உயிர் காக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் அவசர தேவைக்காக ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கு தலா 2 ஆட்டோக்கள் வீதம் 130 ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 ஆட்டோக்கள் இரவு பகலாக பணியில் இருக்கும். அவசர தேவைக்கு தேவைப்படுவோர் குறிப்பாக மருத்துவமனைக்கு மட்டுமே குறைந்த செலவில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
மருத்துவ ஆவணங்கள் மற்றும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த அவசரகால ஆட்டோ 8448107108 என்ற ப்ரீ தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ஆட்டோ புக்கிங் செய்யலாம். மேலும் ukkeservice.comஎன்ற இணையதளம் மூலமும் ukk ஆப் மூலமும் ஆட்டோ புக்கிங் செய்யலாம். இந்த ஆட்டோவை ஓட்டும் ஓட்டுனர்கள் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பார்கள்.
உயிர் காக்கும் கரங்கள் நிறுவனர் அப்துல் கபூர் இந்த அவசரகால ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளார். அகில இந்திய தேசிய வளர்ச்சி உயிர்காக்கும் கோவித்- 19 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதற்கென்று பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை காவல்துறையினர் அனுமதிக்க எங்களது அறக்கட்டளை சட்டப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அப்துல் கபூர் கூறினார்.
பேட்டி: அப்துல் கபூர்.
உயிர்காக்கும் கரங்கள் நிறுவனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment