Saturday, April 04, 2020

On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 04

பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர்  அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்ற வருகிறது. கொரனா வைரஸை பரவாமல் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளி மாநிலத்துக்கு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களை முன் வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும்,  தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் மத்திய . மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாத திருச்சி ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருள்ராஜ் (65) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3நாட்களுக்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருச்சி வந்தார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் அலங்கராஜ் அவரிடம் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும்,  தனிமை படுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.  ஆனால் அவருடைய அறிவுறுத்தலைக்  கேட்காமல் மீறி பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக அலங்கராஜ் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தலைமையில் போலீசார் உதவியுடன் அந்த நபரை தேடினர். அப்போது அருள்ராஜ் எடத்தெரு - மார்கெட் சாலையில் இருந்த அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்கள்  உடனடியாக கிருமி நசினி மருந்தை தெளித்தனர்.

0 comments: