Tuesday, April 21, 2020

On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
தனி ஒருவர் வெளியில் நடமாடும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளனர்

                     
அறம் மக்கள் நலச்சங்கம் என்ற பனியன் அணிந்து இருக்கும் பொழுது ஏன் முக கவசம் அணிய வில்லை? சமூக இடைவெளி பின்பற்றவில்லை? இது அந்த நிறுவன தலைவருக்கு பொதுச் செயலாளருக்கு தெரியாதா?  பொதுச் செயலாளருடன் நின்று புகைப்படமும் எடுத்து உள்ளனர் இது முறையா? மக்கள் நல சங்கம் என்ற பெயரில் அரசு விதிமுறைகளை பின்பற்றாதது ஏன்? 




அரசு அனுமதி இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதா? அரசு அதிகாரிகள் யாராவது உடன் இருந்தார்களா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது? பொது இடத்தில் பொது மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொழுது முக கவசம் அணியாமல் நலத்திட்ட உதவிகளில் கலந்து கொள்ளலாமா?


தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல் பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி பல்வேறு மாவட்டங்களிலும் திருச்சியிலும் தஞ்சையிலும்  வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே என்கிற ரமேஷ் க்குமார் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 50 லட்ச ரூபாய் கொடுத்தனர். மேலும் இவர்கள் தங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தங்களின் தங்கியுள்ள வீட்டில் முன்பு 500க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அதன் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இன்றுகூட திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து சிறப்பு குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத எல்பின் நிறுவனத்தினர் இலவச பொருட்கள் நாங்கள் தருகிறோம் என விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முறைப்படி மாஸ்க்  மற்றும் கையுறை அணிந்து சமூக இடைவெளி விட்டு நின்று பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கலாம், ஆனால் உண்மையில் வைரஸ் பரவுவதை பற்றி ஒன்றும் அறியாத அந்தநல்லூர் மருதாண்டா குறிச்சி கிராம மக்களை ஒன்று கூட்டி வைரஸ் பரவ செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது ? முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்றார்கள் என்பது தெரியவில்லை? தொடர்ச்சியாக சமூக இடைவெளி இல்லாமல் இவர்கள் செயல்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 இதற்கு உதாரணம் இன்று மருதண்டகுறிசி ஊராட்சியில் எஸ்,ஆர்,கே,ரமேஷ், பால்ராஜ், மக்கள் ராஜ்யம் பிஆர்ஓ கோவிந்தன் சில பிரபல கட்சி நிர்வாகிகள்  நலத்திட்ட பொருட்கள் மற்றும் தலைக்கு ரூபாய் 100 வழங்கியுள்ளனர்.

 இது பொதுமக்களும் அரசாங்கத்தின் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்துள்ளனர் .

 சமீபத்தில் இவர்கள் துபாய் சென்று வந்து இருந்தனர் இதைப்பற்றி நாம் செய்தி வெளியிட்ட பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்து  அனைவரையும் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தார். இவர்களுக்கு கொரோனா  தொற்று இல்லை என்று எத்தனை சோதனை  செய்ய பட்டு உள்ளது என்று தெரியவில்லை ?

இவர்கள் அனைவரையும் மீண்டும் புதிய ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளதா என்றும் தெரியவில்லை? வைரஸ் தொற்று இல்லை என்று  அறிந்த பின்பு  பொதுமக்களுக்கு நேரடியாக வந்து உதவி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று உள்ளார்களா? என்று தெரியவில்லை? காவல் துறையிடம் அனுமதி பெற்றுதான் செய்திருக்க வேண்டும் அனுமதி பெற்றார்களா அதுவும் தெரியவில்லை?

அப்படி அனுமதி இல்லாமல் உதவி என்ற பெயரில் வைரசை பற்றி விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களிடம் சமூக இடைவெளியில்லாமல் நலத்திட்ட உதவி வழங்கியதற்கு இவர்கள் மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்து உடனடி நடவேடிக்கை எடுத்து அப்பாவி பொதுமக்களை காக்க வேண்டும். கொரோனா பரவினால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நோயை  தடுக்க படும் கஷ்டங்கள் அனைத்து  வீணாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

0 comments: