Saturday, May 23, 2020

On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது

   திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி பகுதியான வேம்பனூர் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு மருங்காபுரி பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

 அப்போது மினிக்கியூர் அருகே மணல் அள்ளிக்கொண்டு வந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுனர் திருப்பதி (33), லாரி ஓட்டுனர் குமரேசன் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் தொடர்புடைய மினிக்கியூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அருணாச்சலம் என்ற பெருமாள் (55) மற்றும்  (33), தனபால் (45), சதீஷ் (25), சங்கர் (38), சதாசிவம் (30), ராசு (30) ஆகிய 9 பேரையும் கைது செய்து வளநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனை அடுத்து அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்து பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
   
 கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற பெருமாள் மருங்காபுரி ஒன்றியத்தின் அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து தற்போது இவரது மனைவி பராசக்தி மருங்காபுரி ஒன்றிய 2 வது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து பினாமிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இவரை தற்போது முதன் முறையாக போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   நீண்ட நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது மணப்பாறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: