Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 
சப் கலெக்டர் நேரில் விசாரணை. 


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலையும் மணல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், வருவாய் ஆய்வாளர் ஒருவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனங்களையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்று மணல் கடத்திச் செல்லலாமா என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் சப் கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் எதற்காக மணல் ஏற்றினார்கள்? எவ்வளவு மணல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சப் கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 
கொரோனா நேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வரும் இந்த சூழலில் வருவாய்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: