Tuesday, May 26, 2020

On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 26

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர். 


கோவிந்தராஜூலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஆட்சியரை  சந்தித்தோம். கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தி எங்களது குறைகளையும், அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறினோம். மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான சம்பளம் தற்போது நிலுவையில் உள்ளது. 



ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவித்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அரசு எடுத்து அறிவிக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும். சனிக்கிழமை முதல் தொழில் நிறுவனங்களை திறந்து தொழில் புரியலாம் என்று தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் வெள்ளிக் கிழமைக்குள் அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

0 comments: