Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
எந்தவித உதவியுமின்றி பரிதவிக்கும் நாடக கலைஞர்கள். 


வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அரசுக்கு கோரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதனால் எந்த பகுதிகளிலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடைபெறவில்லை. 
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இதுவரை எந்தவித உதவியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
சுமார் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பட்டிச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு கோவில்பட்டி சங்கத்தில் உள்ள நாடக கலைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று நாடக – நடிகர்கள் வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப் பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

0 comments: