Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
*வையம்பட்டி வட்டாரம் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது*.

வையம்பட்டி வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.விவசாய நிலங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே உரம் மற்றும் இடுப்பொருள்கள் பரிந்துரைக்கப்படுகிறது .

மேலும் அந்த மண்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மண்வள அட்டைகள் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி பருவத்திற்க்கு முன்னதாக வழங்கப்படும் . அதற்காக நம் வையம்பட்டி வட்டாரத்தில் முகவனூர் தெற்கு , பழையக்கோட்டை , குமாரவாடி , அனியாபூர் , நடுப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உதவி வேளாண்மை அலுவலர் மூலம் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது .
                   உரச்செலவைக் குறைக்கவும் மகசூலை அதிகரிக்கவும் மற்றும் களர் , உவர் நிலங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மகசூல் அதிகரிக்கவும் , மண் தன்மைக்கேற்ப பயிர் செய்து விளைச்சலை பெருக்கவும் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உர அளவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மண்வளத்தை பரிசோதித்து அதன் அடிப்படையில் உரமிட்டு பயன்பெறும்படி வையம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு திருமதி பூ.வசந்தா அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் .

12.05.2020 அன்று வையம்பட்டி வட்டாரத்திற்கு திருச்சி மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) திரு.இளங்கோவன் அவர்கள் ஆய்வு பணிக்கு வருகை தந்த போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள், விநியோகம் திட்டத்தில் லெட்சம்பட்டி கிராமத்தில் அமைத்துள்ள  உளுந்து விதைப்பண்ணை, வம்பன்8,மற்றும் தெற்கு அம்மாபட்டியில் கம்பு, தனசக்தி விதைப்பண்ணையை ஆய்வு பணி செய்தார்கள்,ஆய்வு பணியின் போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மாவட்ட ஆலோசகர் திரு.சந்தான கிருஷ்ணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) திருமதி. பூ.வசந்தா, வேளாண்மை அலுவலர் மேனகா,உதவி விதை அலுவலர் நா.செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் எஸ்.சிவக்குமார், இராமசுப்பிரமணியன்,அட்மா அலுவலர் கலைச்செல்வன், பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: