Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மனவேதனையால் மாற்றுத் திறனாளி ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.


விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் வயது 36. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக (கிளர்க்) வேலை பார்த்து வருவதோடு ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான காசிநாதனுக்கு அவ்வபோது மதுரைக்கும் பணிக்கு அனுப்பதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் மதுரைக்கு செல்ல முடியாமல் தவித்த காசிநாதன் இன்று இரவு தான் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கி அந்த ஒயர் அறுந்த நிலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஒரு பேப்பரில் இறப்பிற்கான காரணம் எழுதப்பட்டிருந்தது. அதில் பொது போக்குவரத்தே இல்லாத சூழலில் மதுரைக்கு செல்லச் சொல்கிறார்கள், 120 கிலோ மீட்டர் மதுரைக்கு எப்படி செல்ல முடியும் என்ற வேதனையை கடிதத்தில் எழுதி இருந்தார்.
மாற்றுத்திறனாளியான காசிநாதன் ரெயில்வே ஊழியராக உள்ள நிலையிலும் கூட போக்குவரத்து இல்லாத சூழலில் அடுத்த இடத்திற்கு பணிக்கு செல்ல அறிவுறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: