Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் தாய் பசு இறந்ததால் கண்ணீர் விட்டு அழுத கன்றுக்குட்டியுடன் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் செல்வி ஏகநாதன் இவர் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.  


சில ஆண்டுகளுக்கு முன் பசுங்கன்றுக்குட்டி வாங்கி வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் அது வளர்ந்து முதல் பருவத்தில் ஒரு காளை கன்றுக்குட்டியை ஈன்றது பின்னர்  2ம் பருவத்தில் சில நாட்களுக்கு முன் 2வதாக ஒரு பசுங்கன்றை ஈன்றது. 

கடந்த 10 நாட்களாக தாய் பசு உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் தாய்பசு தன் குட்டிக்கு தவறாமல் பால் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மாட்டுப் பட்டியில் நின்று கொண்டிருந்த பசு தீடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது. துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த பசுங்கன்று  அதன் பின்  கண்ணீர் விட்டு அழ தொடங்கியது. 

பசுவை தன் பிள்ளையை போல் வளர்த்த மாட்டின் உரிமையாளர் செல்வி ஏகநாதன் பசு இறந்ததை பார்த்து கதறி அழுதார். 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரையும் கண் கலங்க வைத்தது.

0 comments: