Thursday, May 07, 2020

On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் முடிவை ரத்து செய்க!

தமிழக அரசுக்கு கோரிக்கை
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இந்த வேண்டுகோளை  நிராகரித்து விட்டு,  (07.05.2020) டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டிக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி பரிபூரண மதுவிலக்கை நிறைவேற்றுவது என்பது ‘அம்மா அரசின் கொள்கை’ என்று அறிவித்து வரும் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசு மதுபான வியாபாரத்தை மட்டுமே அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் கருதுவது வெட்கக் கேடானது.
“குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணைய் போல் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம்“ இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா.
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்காக தனது தோட்டத்தில் தென்னை மரங்களை அனைத்தையும் வெட்டி அகற்றினார் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈ.வெ.ரா.
அஇஅதிமுக அரசு கடந்த 17 ஆண்டுகளாக மதுபான வியாபாரத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ‘மதுக்குடியர்களை’ உருவாக்கி மனித வளத்தை உருக்குலைத்து வருகிறது .
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரானா நோய் பெருந்தொற்று பரவி மக்கள் உயிர்களை பறித்து வரும் நிலையில், அந்த ஆட்கொல்லி நோய் ஒரே நாளில் 527 பேர்களை தொற்றிப் பரவி விட்டது என்று அறிவிக்கும் அரசு, டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது ஆக்கபூர்வ சிந்திக்கும் திறனை இழந்து விட்டதன் அடையாளமாகும்
கோவிட் 19 நோய் பெருந்தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான நிதியை கேட்டுப் பெற இயலாத அரசு, அழுத்தம் கொடுத்து கேட்டால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாவோம் என அஞ்சி நடுங்கி அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி ரூபாய் 250 கோடி சுமையை , 40 நாட்களாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள் தலையில் ஏற்றியுள்ளது.
மக்கள் நலன் பேணுவதில் அக்கறை காட்டாத அரசியல்,  சுயநலக் கும்பல்  ஆதாயம் தேடி வருவதை  முதலமைச்சர் பொறுப்பில் உள்ள பொதுப் பணித்துறையில் வெளியாகும் ஊழல் புகார்கள் வெளிப்படுத்துகின்றன.
கொரானா தடுப்பு ஊரடங்கு காலத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5/=ஆயிரம் கோவிட் நிவாரண நிதி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரிக்கையைக் கூட பரிசீலிக்காத தமிழ்நாடு அரசு, ஏழை மக்கள் வீடுகளில் உள்ள குடும்பப் பெண்கள் தாலி உட்பட தட்டுமுட்டுச் சாமான்களை பறித்துக் கொள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க முடிவு செய்துள்ளது.
கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கும் தமிழ்நாடு அரசின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக மதுக்கடைகள் திறக்கும் உத்தரவை ரத்து செய்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
KC.பாண்டியன், R.நடராஜன், பா.லெனின் ஆகியோர் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போன்று DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் இல்லத்தில் குடும்பத்தினரோடு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தினார்கள்

0 comments: