Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    
Image result for indian police cap cartoonவிருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் பங்கேற்று பேசுகையில், திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில், வீட்டின் வாசல்கள் மூடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் எந்த ஒரு சத்தம் கேட்டாலும், திருடர்கள் என அறிந்தால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தர வேண்டும். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.

0 comments: