Monday, August 17, 2015
சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் 800–க்கும்
மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம்
தொழிலாளர்கள் நேரடியாக வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தீபாவளி சீசன் முடிந்ததும் சில வாரங்களில் புது வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி பணிகள் மிகவும் மந்தமாக உள்ளது. இதுகுறித்து சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–
மார்ச் முதல் மே மாதம் வரை பட்டாசு ஆலைகளின் பிரதிநிதிகள், ஏஜெண்டுகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேம் போன்ற வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆர்டர்களை பெற்று பட்டாசு உற்பத்தி பணியினை தீவிரப்படுத்துவார்கள். இதன் உற்பத்தி ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
உற்பத்தி செய்த பட்டாசுகள் 70 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். மற்ற 30 சதவீத பட்டாசுகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 400–க்கும் அதிகமான பட்டாசு கடைகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திறந்து வைப்பார்கள்.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வெளி மாநில வியாபாரிகள் வருகை தராததால் உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சென்ற தீபாவளி சீசனில் எதிர்பார்த்த வியாபாரம் இருந்ததால் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது ஏராளமான பட்டாசுகள் ஆலைகளிலும், பட்டாசுகள் இருப்பு அதிகம் வைத்துள்ளதால் விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. தள்ளுபடியும் அதிகமாகலாம். இருந்தாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment