Saturday, May 29, 2021

On Saturday, May 29, 2021 by Tamilnewstv   

 திருச்சி புத்தூர் அருகே கபசுர குடிநீர் மற்றும் கொரோனா  தடுப்பு சித்த மருந்து தொகுப்பு வழங்கும் விழா அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது. அரசின் துரித நடவடிக்கையால் இந்த நிலை உருவாகி உள்ளது. எனினும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். வெளியில் வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். திருச்சி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒரு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீர் கலங்கலாக வருகிறது. அதை சரி செய்வதற்காக உடனடியாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


தொடர்ந்து பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். திருச்சி மாநகரில் உள்ள தேவைகளை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் செய்து கொடுக்கப்படும். மாநகரில் உள்ள குறைகளை களைய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கும். தற்போது நடந்து கொண்டிருக்கும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத நிலையை  உண்டாகுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மழை வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி திருச்சி மாநகரில் நடைபெற்று வருகிறது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தூர் வாரப்படுகிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தில் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது. அதேபோல் சாலைகள் செப்பனிடும் பணியும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும். கரோனாவை ஒழிப்பது மட்டுமின்றி மக்களுடைய அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கும். விரைவில் சாலை, கசீரான குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

நடைபெற்ற விழாவில்  தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கரொனா தடுப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்சியில் கரோனா அதிகபட்சமாக நாளொன்றுக்கு 1,750 வரை இருந்தது. இது தற்போது குறைந்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. ஒத்துழைப்பு இல்லாமல் அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் தொற்று குறைவதற்கு சாத்தியம் இல்லை.

56,000 தடுப்பூசி திருச்சி வந்தது. 5 தினங்களில் இன்றோடு முடிந்து விட்டது. மத்திய அரசிலிருந்து 2,000 தடுப்பூசிகள் தினமும் வருகிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வெளியில் இருந்து வாங்கி 56,000 தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு சித்தா பெட்டகம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

தொற்று பரவுவதற்கு ஒருவரோடு ஒருவர் உரசுவது தான் காரணம். முகக்கவசம் ஒழுங்காக அணியவேண்டும். மூன்று நாட்கள் ஒரே முக கவசம் அணிவது பயனளிக்காது. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைத்தாள் இன்னும் ஒரே வாரத்தில் கரோனா தொற்று திருச்சியில் 500 வரை குறைத்து விடலாம். மற்ற மாவட்டத்தை விட நமது மாவட்டத்தில் குறைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தான் காரணம்.

10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 35 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கை 70 காலியாக உள்ளது. இதற்கு அரசின் துரித நடவடிக்கை தான் காரணம். காய் வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. காய்கறி வாங்குகிறோமோ இல்லையோ கொரோனாவை வீட்டிற்கு வாங்கி செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உடலும் நல்லா இருக்கும், மாவட்டமும் நன்றாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவள்ளி  கோட்ட உதவி ஆணையர் வினோத் மற்றும் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். நலம் நாட கொரோனா தடுக்கும் சித்தா மருந்து  பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது பாரம்பரிய மருத்துவத்துடன் இணைந்து அனைவரும் கொரோனா நோயிலிருந்து விடுபட பாடுபடுவோம். அரசு வழிகாட்டுதலை பின்பற்றுவோம். என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

0 comments: