Saturday, May 29, 2021

On Saturday, May 29, 2021 by Tamilnewstv   

 திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் உள்ளது. கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை ஆகியவற்றால் இந்த வாய்க்காலில் நீரோட்டம் பாதித்துள்ளது.

இதனால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் எதிர்வரும் மழை காலத்தில் இந்த பகுதியிலிருந்து மழை நீர் வடிவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். மழை காலம் வருவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகராட்சி மூலம் இந்த வாய்க்காலை தூர்வார வலியுறுத்தினார்.

தற்போது கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வாய்க்கால் முழுவதையும் ஆழமாக தூர்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.


 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

சமூக வலைத்தளத்தில் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகளை அழைப்பது இல்லை எனவும் நிர்வாகிகள் உடன் சேர்ந்து ஆய்வுக்கு செல்வதில்லை எனவும் இதனால் திமுக நிர்வாகிகள் இனிகோ இருதயராஜ் மீது அதிருப்தியில் உள்ளதாக பொய்யான செய்தி பரப்பியுள்ளனர்.

திருச்சியில் இனிகோ இருதயராஜ் திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிற செய்தி  முற்றிலும் பொய்யானது.

'அனைவரும் பாருங்கள்' அனைத்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகள் என்னுடன் பயணிக்கிறார்கள் எனக் எனக் கூறினார்.

இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

0 comments: