Tuesday, June 01, 2021

On Tuesday, June 01, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி 



தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் முழு வீச்சோடு செயல்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் தடுப்பு ஊசியின்  தேவையை வலியுறுத்தும் பிரச்சாரம் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள், இலவசமாக வழங்குதல் சாலையோரம் மற்றும் தேவையுடையவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் மூலம் உதவி செய்தல், கொரோனாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினரை பயன்படுத்துதல், கொரோனாவால்  பெற்றோர்களை இழந்த குழந்தை களுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம், அவசரத் தேவைக்கான மருத்துவ எண்களை கொடுத்து உதவுதல், மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான பணிகள் என ஜமால் முஹம்மது உதவி மையத்தின் மூலம் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி உதவி மையத்தினை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால், உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: