Friday, June 04, 2021

On Friday, June 04, 2021 by Tamilnewstv in    

திருச்சி  கொரோனா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை வழங்கிய திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்    

 திருச்சி முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8,9அ வார்டுகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருச்சி ஈபி ரோடு தாரநல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 200 மேற்பட்ட நபர்களுக்கு மேல் கொரானா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை திமுக கிழக்கு சட்டமன்ற வழங்கினார். 


அப்போது அங்கிருந்த முதியோர் ஒருவர் உயர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை மங்கிய நிலையில் இருந்த ஒரு முதியவருக்கு இனிகோ இருதயராஜ் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறி மேல் சிகிச்சை செய்வதற்கான ஆலோசனைகளை கூறி மேல் சிகிச்சை நடவடிக்கை உதவிகளை தான் செய்வதாக முதியவருக்கு மனிதநேயத்துடன் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.


 மேலும் இந்நிகழ்ச்சியின் போது தலைமை கழகம் அறிவிப்பின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர் 

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது

நடைபெற்ற நிகழ்ச்சியில்  14  வட்டச் செயலாளர் சிலம்பரசன் 8 வட்ட செயலாளர்  தசரதன் மற்றும் நிர்வாகிகள் 9அ வட்டச் செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன் நவம் கந்தன் மோகன் தீனதயாளன் சக்திவேல் குமார் பரிமனம்  மருத்துவர்விஜயலட்சுமி, ராஜ்குமார் பிரபாகரன் பரமசிவம் பெரியசாமி தேவராயன் பிரதீப் திராவிட பண்ணை முத்து தீபக் செல்வராஜ் அருண் ஸ்ரீதர் தினேஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

0 comments: