Sunday, June 19, 2022

On Sunday, June 19, 2022 by Tamilnewstv in    

 திருச்சி 



எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து "முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் தனியார் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் இயங்கி வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் எங்களின் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பி தரப்படும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறியதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்


இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர். ஆனால் டெபாசிட் செய்தவர்களின் முதிர்வு காலம் முடிந்த நிலையிலும், பலருக்கு பணம் திரும்பி தரப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பணம் திருப்பி கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா மற்றும் ரமேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடுத்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர்  0003161010 & 0006833411, Infi Galaxy marketing India pvt ltd 

Chennai என்று இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர் . 


மேலும் எல்பின் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மீது விருதுநகர் மாவட்டம் E.O.W 8/2015 திருச்சி E.O.W 1/2019 பெரம்பலூர் 69/2019 மதுரை மாவட்டம் C.C.B 49/2019 தஞ்சாவூர் மாவட்டம் குற்றப்பிரிவில் 1/2020 மதுரை சிட்டி அவனியாபுரம் காவல் நிலையம் 218/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் 104/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் கன்டோன்மென்ட் நிலையத்தில்554/2020 மதுரை சிட்டி கே புதூர் 25/2021 மதுரை சிசிபி 49/2019, 12/2021 ,2/2022 சிவகங்கை மாவட்டம் என்று இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் மேல் நிலுவையில் உள்ள போதும் இதனால் வரை சொத்துகள் முடக்க வில்லை ரெவின்யூ காவல்துறை பத்திரப்பதிவு அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.

இந்நிலையில் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து புதிதாக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள அமோக திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா பொருளாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பங்குதாரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



பொருளாளர் ஹேமா கூறுகையில்

முதல் முதலில் புகார் அளிக்க வேண்டும் பிறகு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது இருக்கிறது அத்தனையும் கடந்து வந்தால் தான் அவர்களுக்கு பணம் திருப்பி பெற முடியும் மக்களுக்கு ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு கொடுப்பதற்காக தான் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி படைக்கும் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் துரித நடவடிக்கை எடுத்து எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.


காலத்திற்கான நீதி எங்களுக்கு கிடைக்க வேண்டும் காலந்தாழ்த்தி நீதி கிடைத்தாலும் அது அநீதி தான் அதற்காக தான் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைத்து உள்ளோம் எங்களுடைய ஒத்துழைப்பு இன்றைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு எங்களுடைய வேதனையும் வலியும் புரிந்து கொண்டு இந்த வழக்கை சிறப்பு வழக்காக நடத்தி எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.


உறவு முறைகளை கூறி ராஜா என்கிற அழகர்சாமி ,எஸ் .ஆர்.கே ரமேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் எங்களுடைய நகையெல்லாம் விற்கத் செய்து பணத்தை முதலீடு செய்ய கூறி ஆசை வார்த்தைகள் தூண்டி முதலீடு செய்தால் அதற்குரிய தண்டனையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன கல்லூரிகளுக்கு படிப்பு படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் செயலாளர் கவிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


முதலீட்டு செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது அவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வழிகாட்டவே இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எல்ஃபின் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் கோடிகணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளனர் அதற்காக நாங்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம் தனித்தனியாக செயல்பட்டு பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம் எங்களை போலவே பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பலர் புகார் கூட அளிக்கவில்லை அவர்களுக்கு எப்படி புகார் அளிப்பது என்கிற ஆலோசனை வழங்கப்படும். எங்களுக்கான தனி விசாரணைக் அமைக்கப்பட்டுள்ளது அந்த விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் பலருக்கு இந்த விசாரணைக் குழு அமைத்தது தெரியவில்லை பாதிக்கப்பட்ட நபர் களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். முழு ஒத்துழைப்பையையும் விசாரணை குழுவுக்கு அளிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

பேட்டி:- கவிதா

முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்க செயலாளர்

0 comments: