Showing posts with label karur. Show all posts
Showing posts with label karur. Show all posts
Thursday, May 12, 2016
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது: இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் தோல்வியை வழங்க வேண்டும். வாக்கு சேகரிக்கச் செல்லும் அதிமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார் ஜெயலலிதா. ஏன் கடந்த 5 ஆண்டுகளில் இதை செய்யவில்லை? இனி அவர் முதல்வராக முடியாது. முதல்வராக இருக்கும்போதே 2 முறை சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சிறை செல்வது உறுதி. யானையின் மீது காட்டும் பரிவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் காட்டாதவர் ஜெயலலிதா.
காவிரி, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத அவர் மீண்டும் முதல்வரானால் தமிழகம் நரகமாகிவிடும். மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர். மக்களை சந்திக்காத, மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியாத ஜெயலலிதா ஆட்சியில், ஏழை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக் கவில்லை. அமைச்சர்களை அவர் கொத்தடிமைபோல நடத்துகிறார். மின்வெட்டைப் போக்குவதற்காக கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின் கட்டணச் சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டனர். இந்த அவலங்களில் இருந்து மீள, திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
