Tuesday, September 16, 2014
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 28வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி திங்களன்று திருப்பூரில் மக்களுக்கான மருத்துவம் என்ற சிறப்புக் கருத்தரங்கில் அகில இந்தியச் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் சிறப்புரை ஆற்றுகிறார். உடன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு, சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.
இக்கருத்தரங்கின்போது வெண்மணித் தியாகிகள் நினைவாலயத்திற்காக மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
-------------------
மருந்துத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை
பாரதிய ஜனதா அரசு முழுமையாக வரவேற்கிறது
மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சாடல்!
திருப்பூர், செப்.16-
இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலையச் செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியதாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது என்று அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் குற்றம்சாட்டினார்.
திருப்பூரில் திங்களன்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற "மக்களுக்கான மருத்துவம்" என்ற சிறப்புக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்.ரமேஷ்சுந்தர் தமது உரையில் கூறியதாவது:
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மருத்துவம். இந்த மருத்துவத் துறைக்கு தேவையானது மருந்துகள். ஆனால் மருத்துவத்திற்கென தனியாக சுகாதாரத் துறை அமைச்சகம் வைத்திருக்கும் மத்திய அரசு, மருந்துகளை அந்த துறை வசம் ஒப்படைக்காமல் பெட்ரோ கெமிக்கல்ஸ் எனப்படும் தனித்துறை வசம் பிரித்து வைத்திருக்கிறது. இதில் இருந்தே மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் லாபத்திற்கான துறையாக பார்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மருந்து தயாரிக்கும் நாடுகளில் இந்தியா உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பது பெருமைக்குரியது. நம் நாட்டில் மொத்த மருந்து உற்பத்தி ஆண்டுக்கு ரூ.1லட்சம் கோடியை எட்டிவிட்டது. உலக அளவில் இந்தியாவில் தான் மருந்து விலை குறைவாக இருக்கிறது. அதேசமயம், அந்த மருந்துகளின் உற்பத்திச் செலவை ஒப்பிட்டால் 300 முதல் 400 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கிறது.
உலக அளவில் ராணுவ தளவாட உற்பத்திக்கு அடுத்தபடியாக அதிக அளவு முதலீடும், லாபமும் ஈட்டக்கூடிய துறையாக மருந்துத்துறை இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் மருந்துத்துறை சுயசார்புடையதாக இருந்தது. ஆனால் 1991ல் தொடங்கப்பட்ட தாராளமய கொள்கை அமலாக்கத்தின் மூன்றாவது தலைமுறை சீர்திருத்தம் வந்த பிறகு நமது சுயசார்புத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் 90 சதவிகிதத்திற்கு மேலான மருந்துகளின் மூலப்பொருட்கள் மேலை நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகளாக தயாரிக்கப்படுகின்றன.
இதனால் 1956ல் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் மூலம், பொதுத்துறை பலப்படுத்தப்பட்டு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டது தற்போது சீரழிக்கப்பட்டுவிட்டது. பொதுத்துறை மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் வந்தபிறகு சந்தையில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டெட்ரா மைஸின் 10 பைசாவுக்கு கிடைத்தது. அதேபோல் 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாத்திரை 60 பைசாவுக்குக் கிடைத்தது. பொதுத்துறை நிறுவனமும் லாபத்தை வைத்துத்தான் மருந்து விற்பனை செய்தது. அப்படியானால் தனியார் முதலாளிகள் மருந்துத்துறையில் ஈட்டிய லாபம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை அறியலாம்.
1970ல் இந்திய மருந்துச் சட்டம், புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மூலப்பொருளுக்கு பதிலாக மருந்து செயல்முறைக்கு காப்புரிமை (பிராஸஸ் பேட்டன்) வழங்கியது. இதனால் ஒரே மருந்தை பல நிறுவனங்கள் வெவ்வேறு விதத்தில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்தன. எனவே போட்டி காரணமாக மருந்து விலை கட்டுப்படுத்தப்பட்டது. ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட மருந்து ரூ.2க்குக் குறைந்தது.
இன்றைக்கு அறிவுச்சொத்துடைமை காப்புரிமை சட்டத்தின் மூலம்தான் இந்திய மருந்துத் துறைக்கு மிகப்பெரும் ஆபத்து வரப்போகிறது. போலியோ மருந்து கண்டுபிடித்த அறிஞர் அதற்கு சொந்தமாக காப்புரிமை பெற மறுத்துவிட்டார். அதனால் போலியோ மருந்து உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு மலிவாகக் கிடைத்தது, பல கோடி குழந்தைகள் போலியோவில் இருந்து காப்பாற்றப்பட்டனர். ஆனால் இதற்கு காப்புரிமை பெறப்பட்டிருந்தால் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் அதைப் பெற்று மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய மருந்தாக மாற்றியிருப்பார்கள்.
இன்றைக்க காப்புரிமை சட்டத்தில் பல தில்லுமுல்லுகளைச் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். புற்று நோய்க்கான மருந்து ரூ.5 ஆயிரம் மட்டுமே, அதே மருந்தை பன்னாட்டு நிறுவனம் உற்பத்திக்கான காப்புரிமை (ப்ராடக்ட் பேட்டன்) பெற்றுக் கொண்டு ரூ.1லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் நியாயமாக தீர்ப்பு வழங்கி புற்றுநோய் மருந்து ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியது. உடனடியாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால் வரமுடியாது என்று கூப்பாடு போட்டனர். அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா பன்னாட்டு நிறுவனத்திடம் மன்னிப்பே கேட்டார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய பாரதிய ஜனதா அரசும் பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களை முழுமையாகக் கைவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றன. மருந்து தயாரிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ஐடிபிஎல் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசிகள் தயாரித்த பொதுத்துறை நிறுவனங்களை நலிவடையச் செய்து மத்திய அரசு கைவிட்டுவிட்டது.
தொற்று நோய்களைத் தடுக்கும் மருந்துகள் சிறப்பாக உற்பத்தி செய்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்கு சிறப்பானது. அதை அப்படியை மத்திய அரசுகள் கைவிட்டு விட்டன.
அதேபோல் மருந்துகளின் விலைக்கட்டுப்பாட்டு கொள்கையையும் அரசுகள் கைவிட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான மருந்துகளில் வெறும் 354 மருந்துகள மட்டுமே விலைக்கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. மொத்த உற்பத்தி மதிப்பை ஒப்பிடும்போது வெறும் 2 சதவிகித மருந்துகள் மட்டுமே விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. விலைக்கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்கிக் கொள்ளும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது. மருந்துகளின் பிராண்ட் பெயர்களை வைத்து விற்பனை செய்வதற்கு மாறாக, அவற்றின் மூலப்பொருளை கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவதும் ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிதான்.
எனவே மருந்துத்துறை பற்றி பொது மக்களுக்கு மிகப்பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசி, பிணி, பகை இல்லாத நாட்டைப் படைக்க நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு ஆர்.ரமேஷ்சுந்தர் பேசினார்.
திருச்சியில் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ள மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வி.ராஜாராம் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் வெண்மணி நினைவாலயத்திற்கு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரனிடம் வழங்கினர்.
கோவை,செப்.16-
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கிழக்கு மண்டல பகுதியில் சந்தையில் அமைச்சர் மோகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் சந்தையில் அமைச்சர் மோகன் பெண்களிடம் 3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அமைச்சருடன் மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன், முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.
சூலூர்.செப்.16-
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணா தி.மு.க.நிர்வாகிகளும்,கூட்டணி க்கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம், இருகூர் பேரூராட்சி மன்ற இடைத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் டி.பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கி சங்க தலைவர் என்.சி.குட்டியப்பன், கருமத்தம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக நல்ல பல திட்டங்களை அளித்து வருகிறார்.எங்களை போன்ற எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் காலையில் வைக்கும் கோரிக்கைகளை மாலையில் 110 விதியின் கீழ் திட்டங்களாக அறிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை கொண்டு செல்லும் வகையில் விஷன் 2023 ஐ உருவாக்கியுள்ளார்.அவரது வாழ்நாளில் தமிழக மக்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு விடமாட்டேன் என சூளுரைத்து மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அள்ளும் பகலும் அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.அவரது ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிடும் பத்மசுந்தரி துரைசாமி நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.முதல்வரின் திட்டங் களை முன் நின்று செயல்படுத்துபவர்.அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கதிரவன் எம்.எல்.ஏ.பேசினார்.
கூட்டத்தில் வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்டசெயலாளர் கர்ணன். அம்மா பேரவை தலைவர் ராமசாமி உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இருகூர் 18வது வார்டு பொறுப்பாளர் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்ஷயா செந்தில், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், எஸ்.கே.மணி, வசந்தி ஆறுமுகம், மார்டின்,பொருளாளர் ஜோசப்,செல்லமுத்து, ராயர்பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று 3 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இருகூர் பேரூராட்சி மன்ற 5வது வார்டு பொறுப்பாளர் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தலைமையில் சூலூர் அங்கமுத்து, இருகூர் நகர செயலாளர் துரைசாமி, ஜல்லிப்பட் டி ராமசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து உள்பட பலர் காமாட்சிபுரம் 5வது வார்டு, மெயின் ரோடு, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடு,வீடாக சென்று ஜெயலலிதாவின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும்,சுல்தான்பேட்டை ஒன்றிய துணைத் தலைவருமான வ.மா.பழனிசாமி தலைமையில், 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ள இருகூர் டவுன், கண்ணன் நகர் முத்துராமலிங்கம் வீதி, சாமியான்மேடை, ஒண்டிபுதூர் ரோடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, சுல்தான்பேட்டை ஒன்றிய பாசறை செயயலாளர் மகேஸ்வரன், பூராண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், சுல்தான்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அமலோற்பவமேரி, கண்ணம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரங்கநாதன், செஞ்சேரி தங்கவேல், வேலாயுதம், சின்னகுயிலி துரைசாமி, கிளை செயலாளர் சுந்தர்ராஜ்,சுல்தான்பேட்டை ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மணிமாலா, அமிர்தம், இருகூர் பகுதி கிளை நிர்வாகிகள் பூபால் செல்வம், ஜெகநாதன், வெற்றிவேல்,நாகராஜ், குமார், பிளம்பர் ஈஸ்வரன், உச்சா செல்வராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
ரூ.5 லட்சம் கடனுக்கு, ரூ.57 லட்சம் கேட்டு எவர்சில்வர் பாத்திர கம்பெனி அதிபரிடம் தொல்லை கொடுத்த பிரபல கந்துவட்டி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சண்முகம்
சென்னை காரப்பாக்கம், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சொந்தமாக எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி வளர்ச்சிக்காக, இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். சென்னை புரசைவாக்கம், கரியப்பா தெருவில் வசிக்கும் காமராஜ் (வயது 39) என்ற துணிக்கடை அதிபர், இந்த கடன் தொகையை கொடுத்துள்ளார். இவர் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார்.
சண்முகம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியபிறகும், காமராஜ், வட்டிக்கு வட்டி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கோர்ட்டிலும் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
கந்துவட்டி புகார்
இதனால், சண்முகத்தின் மகன் டில்லிராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமராஜ் மீது புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியதாவது:-
எனது தந்தை சண்முகம் தான் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும், எனது தந்தை கடனுக்காக கொடுத்த சொத்து ஆவணங்களை காமராஜ் திருப்பி தர மறுக்கிறார். ஏற்கனவே பெற்ற ரூ.30.25 லட்சம் போக,மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, மிரட்டுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தந்தை கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காமராஜ் கைது
இந்த புகார் மனு மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கந்துவட்டிக்காரர் காமராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை கந்து வட்டி மன்னர், என்றே போலீசார் வர்ணித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள காமராஜின் குடும்பத்தினர், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வாழ்கிறார்கள். காமராஜ் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தைரியமாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைபாதை கடைகள் வைப்பதற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வணிக வளாகம்
சென்னை பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்கென மாநகராட்சி வணிக வளாகம் கட்டிக்கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 629 கடைகள் உள்ளன. வணிக வளாக கட்டிடத்தில் தரை தளத்தில் உள்ள கடைகளில் மட்டும் வியாபாரம் நடைபெறுகிறது.
1 மற்றும் 2-வது தளங்களில் உள்ள கடைகளுக்கு குறைவான வாடிக்கையாளர்கள் செல்வதால் போதுமான வியாபாரம் நடைபெறுவதில்லை. இதனால் வியாபாரிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தியாகராயநகர் பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி இடத்தில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இந்தநிலையில் நேற்று நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகத்தில் விற்பனை பாதித்த கடை உரிமையாளர்கள் 279 பேர் விழாக்காலத்தையொட்டி தற்காலிகமாக நடைபாதைகளில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கடைகளை பூட்டிவிட்டு திரண்டு செல்ல முயன்றனர். தகவல் அறிந்த பாண்டிபஜார் போலீசார் அவர்களை வணிக வளாகத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து நடைபாதையில் பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகள் மீண்டும் தங்களது கடைகளை திறந்தனர்.

டிப்ளமோ நர்சிங் கவுன்சிலிங்’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.
18-ந்தேதி வரை நடக்கிறது
கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

Subscribe to:
Posts (Atom)