Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    

குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகள், போலீஸ் மற்றும் நீதிபதி முன் மிகவும் பவ்யமாக நடந்து கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் கைதி ஒருவர், போலீசாரின் கார் இருக்கையை கடித்து சேதப்படுத்தி மற்றொரு வழக்குக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்காவின் ஜடகோ மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டாசி ஸ்பென்ஸ். இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு தம்பதி மீது மிளகுபொடியை வீசினார். எனவே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டாசி ஸ்பென்சை போலீசார் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்ற அவர், திடீரென ஒரு போலீஸ்  காரின் பின் இருக்கையை தனது பற்களால் நறுநறுவென கடித்து துப்பினார். இதனால் அந்த இருக்கை முழுவதும் சேதமடைந்தது.  இது தொடர்பாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் எந்த அளவுக்கு ஒரு டாக்டரின் பணி முக்கியமோ, அதே அளவுக்கு நர்சுகளின் பணியும் அவசியம். நர்சுகள் கூறும் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை போன்ற உடல் பரிசோதனை முடிவுகளின்படி தான் நோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிப்பார்.  அவ்வாறு நர்சுகள் கொடுக்கும் பரிசோதனை முடிவுகள், அவர்களது மோசமான கையெழுத்துக்களால் நோயாளியின் உயிரையே பறித்து விடுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள 2 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர். கடந்த 2004 முதல் 2010 வரை நடத்திய ஆய்வில், நர்சுகளின் மோசமான கையெழுத்து காரணமாக 2 மருத்துவமனைகளிலும் 750 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனைகளில் உள்ள நர்சுகளுக்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ போன்களும், ஐ பேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 15 சதவீதம் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    







குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர்  திரு .c மாசிலாமணி  வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி  பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற  துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி  வாரியத்தலைவர் உடுமலை   ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெரிய கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பாண்டி .இவர் பெரிய கட்டளையில் உள்ள சர்வே எண் 116 ல் சுமார் 59 சென்ட் வண்டிப்பாதை ,மயானப் பாதை மற்றும் ஊரணியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பெரிய கட்டளை கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர் .இதனால் விவசாய இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கு இடையூறாக உள்ளது .59 சென்டையும் ஆக்கிரமித்து கார் செட் ,வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் .இதனை தடுத்தி நிறுத்தி பாதையை மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை டி வி எஸ் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி அக்டோபர் 11 ல் நடைபெறுகிறது .காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கிறது .இதில் மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொள்கிறார் .தொடர்ந்து மாநில ஆளுநர் ரோசையா கலந்து கொண்டு முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ,ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார் .மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஆந்திர ஐ ஏ எஸ் அதிகாரி சுகுமாறன்,திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி ,ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகளும் நடைபெற உள்ளதாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் , பள்ளி தலைமை ஆசிரியை வித்யாவதி ,முன்னாள் சேர்மன் கல்யாண சுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    

மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்தவர் அட்டாக் பாண்டி. தலைமறைவாக உள்ள இவர் ஐதராபாத்தில் உள்ளதாக தகவல் கிடைத்து, அவரை கைது செய்ய போலீசார் அங்கு விரைந்துள்ளதாகவும், சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை போலீசாரிடம் கேட்டதற்கு, தங்களுக்கும் அப்படித்தான் தகவல் வந்துள்ளது என்று கூறிய அவர்கள், இருந்தபோதும் இதனை உறுதிப்படுத்த முடியவிலை என்று கூறினர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது தேனா புதுக்கோட்டை கிராமம். இங்கு, முதுகளத்தூர் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் முருகனுக்கு தொடர்புடைய செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரி அருகே ராமநாதபுரம் மாவட்ட எல்லையான சூலூர் கிராமத்தில் துரைப்பாண்டி என்ற வழக்கறிஞருக்கு செம்மண் குவாரி உள்ளது.
இந்நிலையில். முருகனுக்கு தொடர்புடைய குவாரிக்கு லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால் அதை புதுப்பிக்க முருகன் விண்ணப்பம் செய்துள்ளார். இதனால் கடந்த ஒருவாரமாக அவரது குவாரி செயல்படாமல் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் முருகன் குவாரியில் இருந்து துரைபாண்டி குவாரிக்கு மணல் அள்ளபட்டு, விற்பனை செய்யபட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த மணல் கடத்தும் விவகாரம் மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் போயிருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில், மானாமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், ஊர்க்காவல்படை காவலர் இருவருடன் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார். அப்போது முத்துகிருஷ்ணன் மஃப்டியில் இருந்திருக்கிறார். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை நிறுத்தி விசாரித்தாராம். அப்பொழுது லாரி ஓட்டுனர்களுக்கும், போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் துரைப்பாண்டிக்கு தகவல் சொல்ல... அவர் விரைந்து வந்திருக்கிறார். இவரும் போலீஸாருடன் வாக்குவாதம்... கைகலப்பு என்று அதிரடியாக இறங்க அங்கே கலாட்டா அரங்கேறிருக்கிறது.
போலீஸாருக்கு சரமாரியாக அடி விழ... ஒரு கட்டத்தில், எஸ்.ஐ.யான முத்துகிருஷ்ணன் மின்னல் வேகத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணல் கோஷ்டியினர், மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஒடிவிட்டார்களாம். அதையடுத்து, நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதோடு, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்து பேசிய ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன.
தமிழக மக்கள் அனைவரும் உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

ஏனென்றால் நீங்கள் உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வகுத்துள்ள பணிகளும் மிக சிறப்பானது.
அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை எல்லாம் நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை.

மேலும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுசூழல் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்தும் மிகவும் பாராட்டக்கூடியவை.காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுசூழலுக்கு ஏற்ற விடயம்.

அதிலும், இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 39 சதவீத தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.நான்கு வருடங்களுக்கு முன்னர் 'R20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன்.

காலநிலை மாற்றம் ஏற்படும் தருணத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560க்கும் மேற்பட்ட நகரங்களையும் மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளை கையாண்டு வருகிறோம். இந்த திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இதுகுறித்த விவரங்களை நான் விரைவில் உங்கள் மாநில சுற்றுசூழல் அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசுகிறேன். இது ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது மாநிலத்துக்கான வளர்ச்சி பாதை இல்லை, ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை நீங்கள் தமிழகத்தில் செய்துள்ளீர்கள்.

இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. நீங்கள் உங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.