Thursday, September 25, 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்து பேசிய ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன.
தமிழக மக்கள் அனைவரும் உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.
ஏனென்றால் நீங்கள் உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வகுத்துள்ள பணிகளும் மிக சிறப்பானது.
அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை எல்லாம் நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை.
மேலும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுசூழல் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்தும் மிகவும் பாராட்டக்கூடியவை.காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுசூழலுக்கு ஏற்ற விடயம்.
அதிலும், இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 39 சதவீத தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.நான்கு வருடங்களுக்கு முன்னர் 'R20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன்.
காலநிலை மாற்றம் ஏற்படும் தருணத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560க்கும் மேற்பட்ட நகரங்களையும் மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளை கையாண்டு வருகிறோம். இந்த திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
இதுகுறித்த விவரங்களை நான் விரைவில் உங்கள் மாநில சுற்றுசூழல் அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசுகிறேன். இது ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது மாநிலத்துக்கான வளர்ச்சி பாதை இல்லை, ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை நீங்கள் தமிழகத்தில் செய்துள்ளீர்கள்.
இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. நீங்கள் உங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்த...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
0 comments:
Post a Comment