Friday, October 03, 2014
திருமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் எஸ்தர் ஏஞ்சலினா கிறிஸ்டி. இவர்
வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் வில்பிரட் பிராங்கோலீசிடம் போனில்
இன்ஸ்சூரன்ஸ் கட்ட வேண்டியுள்ளது என்று ஞாபகபடுத்தினாராம்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.10.2014) திறந்து வைத்தார், மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தகுமார், துணை முதல்வர் சந்தான லக்ஷ்மி , மருத்துவ கண்காணிப்பாளர் வடிவேல் முருகன் கலந்து கொண்டனர், இந்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை கல்லூரியின் குழு தலைவர் K . தினேஷ் அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார் . மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி முகாமில் நோய்கள் விழிப்புணர்வு குறித்தும், நோய்கள் தடுத்தல், மற்றும் விடுகளில் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள், அரசு மருத்துமனைகளில் உள்ள சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்தும் நடைபெற்றது.
இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.
இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.
Thursday, October 02, 2014
உடுமலை ஒட்டுக்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
உடுமலையில் ஏழுகுளம் பாசன பகுதிகள் என்று அழைக்கப்படும் குளங்களுக்கு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளிவாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப் பட்டு பாசன பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஏழு குளம் பகுதியின், கடைசி குளம் ஒட்டுக் குளம். இந்த ஒட்டுக் குளம் 10.150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு (நீர்பிடிப்பு பகுதி) கொண்டது. இந்த ஒட்டுக்குளத்தின் மூலம் சுண்டக்காம்பாளையம், வடபூதனம் ஆகிய கிராமங்களில் பாசன வசதி பெறக்கூடிய நிலப் பரப்பு சுமார் 430 ஏக்கர் உள்ளது.
இந்த ஒட்டுக்குளத்தில் நீர் தேங்கும் பரப்பில், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப் பிற்கு சொந்தமான ஏரியின் ஒரு பகுதியில் 5 ஏக்கர் 63 சென்ட் நிலப்பரப்பை 11 பேர் ஆக்கி ரமித்து நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.அங்கு 42 இளம் தென்னைமரங்களும் உள்ளன. கரும்பு பயிர் மகசூல் எடுக்கப்படும் தற்போது கட்டை கரும்பு துளிர் விட்ட நிலையில் உள்ளது.
ஒட்டுக்குளத்தில் தனியார்களின் ஆக்கிரமிப்பினால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டார்.அத்துடன் சென்னை கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப் பணித்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றறப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு சென்னை கோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் எஸ்.சைபுதீன், நிலவருவாய் ஆய்வாளர் ராமலிங்கம். பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் செல்லமுத்து, இளம்பொறியாளர் சரவணன், தலைமை நில அளவர் தர்மலிங்கம், ஆகியோர் நேற்று ஒட்டுக்குளம் சென்றனர். பாதுகாப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியலிங்கம், அன்பரசு, அனந்தநாயகி ஆகியோர் தலைமையில் 50 போலீசாருடன் சென்றிருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடம் பொதுப்பணித்துறைக்கு கையகப்படுத்தப்பட்டன.இந்த நடவடிக் கைகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2007–ம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது
இந்துக்களின் வழிபாடுகளுள் நவராத்திரி விழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவசைக்கு பின் தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் 9–வது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அன்று வீடுகளில் மாணவ–மாணவிகள் தங்கள் பாட புத்தகங்களையும், அலுவலகங்களில் அலுவலக கோப்புகளையும் சரஸ்வதி தேவி படத்தின் முன் வைத்து ஏடு அடுக்கி வழிபாடுவார்கள்.
இதுபோல் தொழிற்சாலைகளில் ஆண்டு முழுவதும் லாபத்தை ஈட்டித்தரும் எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, தொழிற்சாலைகள் நிறைந்த பனியன் தொழில் நகரமான திருப்பூர் நகரம் களை கட்டி உள்ளது
தொழிற்சாலைகளில் பூஜை செய்ய தேவையான வாழைமரம், கரும்பு, மாவிலை செயற்கை அலங்கார பூக்கள், தேங்காய், பொரிகடலை, பழவகைகள், பூக்கள் என்று அனைத்து பொருட்களும் திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. போதிய அளவு மழை இல்லாததாலும், தண்ணீர் வசதி குறைந்து விட்டதாலும் வாழை மரம், கரும்பு, தேங்காய், பூ ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாகவே இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
பெருந்துறையில் இருந்து வாழை மர கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். உற்பத்தி குறைந்து விட்டதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதி அளவு வாழை மரங்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு விலை கொடுத்து தோட்டத்தில் இருந்து வெட்டி கொண்டு வந்துள்ளோம். சிறிய மரம் ஒரு ஜோடி ரூ.15–க்கும், பெரிய மரம் ரூ.20–க்கும் விற்பனை செய்கிறோம். இதே விலைக்கு அனைத்து மரங்களும் விற்று விட்டால் லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும். கரும்பை பொறுத்தவரை மதுரை மேலூர் பகுதியில் இருந்து மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல தரமான கரும்பு இல்லை. இருந்தாலும் ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கிறோம். இப்படி விற்றாலும் எங்களுக்கு லாபம் கிடைக்காது.
பூக்களை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 5 டன் பூக்கள் குறைந்து, 10 டன் வரை மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகமாகி விட்டது. 1 கிலோ மல்லிகைப்பூ, முல்லைபூ ரூ.640–க்கும், செவ்வந்தி, அரளி ரூ.240–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், பட்டுப்பூ, செண்டுமல்லி ரூ.100–க்கும் விற்பனை செய்கிறோம். பூ எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை போன்றவற்றின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. மொத்தத்தில் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டது.வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் கல்லூரி சாலை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி அதிகாலை நேரத்தில் மதுவிற்பனை செய்து கொண்டு இருந்தனர். இது தொடர்பாக பார் ஊழியர் சிவகங்கையை சேர்ந்த ரவியை(வயது 23) கைது செய்து 11 பாட்டில் மது மற்றும் ரூ.1,750 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Wednesday, October 01, 2014
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா சிறப்பு மனுவை இன்றைக்கே விசாரிக்கக் கோரிய அவசர மனுவை அதிமுக வழக்கறிஞர்கள் திரும்பப் பெற்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரும் வழக்கில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்னகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், ஜாமீன் கோரும் ஜெயலலிதாவின் சிறப்பு மனுவை இன்று மாலைக்குள் விசாரிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவை திரும்பப் பெற்றனர்.
நீதித் துறையிடம் அணுகும்போது நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தியதாக தெரிகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)












