Thursday, October 02, 2014
திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது
இந்துக்களின் வழிபாடுகளுள் நவராத்திரி விழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவசைக்கு பின் தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் 9–வது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அன்று வீடுகளில் மாணவ–மாணவிகள் தங்கள் பாட புத்தகங்களையும், அலுவலகங்களில் அலுவலக கோப்புகளையும் சரஸ்வதி தேவி படத்தின் முன் வைத்து ஏடு அடுக்கி வழிபாடுவார்கள்.
இதுபோல் தொழிற்சாலைகளில் ஆண்டு முழுவதும் லாபத்தை ஈட்டித்தரும் எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, தொழிற்சாலைகள் நிறைந்த பனியன் தொழில் நகரமான திருப்பூர் நகரம் களை கட்டி உள்ளது
தொழிற்சாலைகளில் பூஜை செய்ய தேவையான வாழைமரம், கரும்பு, மாவிலை செயற்கை அலங்கார பூக்கள், தேங்காய், பொரிகடலை, பழவகைகள், பூக்கள் என்று அனைத்து பொருட்களும் திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. போதிய அளவு மழை இல்லாததாலும், தண்ணீர் வசதி குறைந்து விட்டதாலும் வாழை மரம், கரும்பு, தேங்காய், பூ ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாகவே இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
பெருந்துறையில் இருந்து வாழை மர கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். உற்பத்தி குறைந்து விட்டதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதி அளவு வாழை மரங்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு விலை கொடுத்து தோட்டத்தில் இருந்து வெட்டி கொண்டு வந்துள்ளோம். சிறிய மரம் ஒரு ஜோடி ரூ.15–க்கும், பெரிய மரம் ரூ.20–க்கும் விற்பனை செய்கிறோம். இதே விலைக்கு அனைத்து மரங்களும் விற்று விட்டால் லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும். கரும்பை பொறுத்தவரை மதுரை மேலூர் பகுதியில் இருந்து மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல தரமான கரும்பு இல்லை. இருந்தாலும் ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கிறோம். இப்படி விற்றாலும் எங்களுக்கு லாபம் கிடைக்காது.
பூக்களை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 5 டன் பூக்கள் குறைந்து, 10 டன் வரை மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகமாகி விட்டது. 1 கிலோ மல்லிகைப்பூ, முல்லைபூ ரூ.640–க்கும், செவ்வந்தி, அரளி ரூ.240–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், பட்டுப்பூ, செண்டுமல்லி ரூ.100–க்கும் விற்பனை செய்கிறோம். பூ எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை போன்றவற்றின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. மொத்தத்தில் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டது.வியாபாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment