Tuesday, February 09, 2016

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா வருகிற 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 22ம் தேதி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்வசதி, தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் கோவில் வளாகங்களில் கொசு மருந்து  தெளித்தல், மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டது. 

பக்தர்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது, கடற்கரையில் பாதுகாப்பு எற்பாடுகள் செய்தல், மீன்வளத்துறையினர் முத்துக்குழி பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினருடன் இணைந்து கடலில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற ஏற்பாடுகளை செய்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், திருச்செந்தூர் கோட்டாச்சியர் தியாகராஜன், திருக்கோயில் இணை ஆணையர் வரதராஜன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு மனிதவள துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் தங்கமயில் விருது கிடைத்துள்ளது. 

மும்மையில் நடைபெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் 10வது சர்வதேச சமூக பொறுப்புணர்வு மாநாட்டில் ஸ்டெர்லைட் காப்பர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் நீர் பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கஜ் முண்டே வழங்க வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் தலைவர் ரோமா பல்வானி மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் மனிதவள தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன் இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.

ஆர்வமிக்க தலைமை மேலாண்மை நிர்வாகம், நிறுவனத்தில் மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மேலும் ஊழியர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் மனிதவள முயற்சிகள் போன்றவையே இந்த விருதினை ஸ்டெர்லைட் காப்பர் பெற முக்கிய காரணம் ஆகும். மொத்தம் 391 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் குழு, தனிக்கை மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டு தங்கமயில் விருது வழங்கப்பட்டது.
On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv   

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

Monday, February 08, 2016

On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி கோயில்களில் கும்பாபிஷேகம் ரூ.3கோடி செலவில் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த அக்டோபரில் தொடங்கிய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 

இன்று கும்பாபிஷேக திருப்பணி அலுவலகத்தை இன்று தொழிலதிபர் ஏ.வி.எம்.வி.மணி திறந்துவைத்தார். அச்சமயம் அர்ச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பணிக்குழுத் தலைவர் பி.எஸ்.எஸ்.கே.ராஜா சங்கரலிங்கம், செயலாளர் பி.விநாயகமூர்த்தி, கமிட்டி பொருளாளர் ரமேஷ், உறுப்பினர்கள் பாஸ்கர்,ஆறுமுகம்,கமலஹாசன்,கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர், அலுவலர்கள்,பக்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி பூபாலராய புரத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தியது.

பின்னர் அந்த கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. வெகுநேரமாக போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் துப்பு துலக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.