Tuesday, February 09, 2016

On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா வருகிற 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 22ம் தேதி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்வசதி, தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் கோவில் வளாகங்களில் கொசு மருந்து  தெளித்தல், மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டது. 

பக்தர்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது, கடற்கரையில் பாதுகாப்பு எற்பாடுகள் செய்தல், மீன்வளத்துறையினர் முத்துக்குழி பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினருடன் இணைந்து கடலில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற ஏற்பாடுகளை செய்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், திருச்செந்தூர் கோட்டாச்சியர் தியாகராஜன், திருக்கோயில் இணை ஆணையர் வரதராஜன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: