Tuesday, April 28, 2020

On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை -  3 பேர்  காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர்.

 ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதிமணியின் மகன் சந்திரமோகன் (38) இவர் பிரபல ரவுடி பல கொலை வழக்குகளில், கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது. 

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர் இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது இந்நிலையில் இன்று காலை  ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் 
அண்ணன் தம்பிகள்

சுரேஷ் (35) சரவணன் (30) இவர்கள் இருவரும்  மற்றொருவர் செல்வகுமார் (25)             3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழி மறித்து  
ரவுடி சந்திரமோகன் 
தலையை துண்டித்தனர். 


பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பறறி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் 
காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள்.

 இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி இப்படி கடிதம் கொடுக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசு உத்தரவின் பெயரில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறதா? உயரதிகாரிகள்  ஏதேனும் சிறப்பு சலுகையின் பெயரில் கடிதம் கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாக உள்ளது?



சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று வந்துள்ளதால் பரபரப்பு,
மாவட்ட ஆட்சியாளர் மட்டுமே வழங்க வேண்டிய Epass யை மணப்பாறை காவல் ஆய்வாளர் எவ்வாறு வழங்கினார் பொதுமக்கள் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் இபாஸ் பெற்று அதன் பின்னரே செல்ல முடியும். அப்படி இபாஸ் பெற வேண்டும் என்றாலும் கூட இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே பெற்றுச் செல்ல முடியும். அந்த இபாசிலும் கூட யார் செல்கின்றனர் அவர்களின் செல்போன் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்.



இது அரசின் கவனத்திற்குள் எப்போதும் இருக்கும். இந்த இபாசை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே பெற முடியும் என்றும் கூட அரசு அறிவித்திருந்தது.





ஆனால் தற்போது மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை பலரும் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் ஒரு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை, தேனி என பல்வேறு  சென்று வருகின்றனர். அப்படி கொடுக்கப்படும் கடிதத்தில் எத்தனை நபர்கள் செல்கின்றனர்? அவர்களின் பெயர் என்ன? அவர்கள் செல்போன் எண் என்ன? என்ற எந்த தகவலும் இல்லை? என்பதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலை கூட காவல் நிலையத்தில் வாங்கி வைப்பதில்லை.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே தான் இந்த இபாஸ் முறை நடைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிட முடியும் என்ற நிலையில் தற்போது மணப்பாறை காவல் நிலையத்தில் காவல்துறையினரே இதுபோன்ற கடிதம் வழங்கும் முறையை நடைமுறைபடுத்தி இருப்பது கொரோனா அச்சத்திற்கான வழிவகையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி யார் செல்கின்றனர் என்ற விபரமும் காவல் நிலையத்தில் இல்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.



ஆகவே இப்படியாக மக்கள் கோரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் வழக்கம் போல் சென்று வரும் நிலையில் மணப்பாறை பகுதிக்கும் கொரோனா தொற்று உருவாகிவிடுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் மக்கள் உறைந்து கிடக்கின்றனர்.



ஆகவே இதுபோன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் அவரின் பெயரால் காவல்துறையினர் அனுமதி கடிதம் கொடுக்கலாமா? 144 தடை உத்தரவு உள்ள நிலையில் எப்படி அந்த கடிதம் கொடுக்க முடியும்? அந்த கடிதம் கொடுப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது? கடிதத்தை பார்த்து மற்ற மாவட்டங்களில் எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதையெல்லாம் விரிவாக விசாரணை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க முயலும் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
  தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைவருக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டு உள்ளது.



  வேலைக்கு செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வாழை வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டு இருந்தோம்.

  வெற்றிலை தற்போது காய்ந்து விட்டது சூறாவளியில் வாழை உடைந்து விழுந்து விட்டது அதேபோல் கரும்பு காய்ந்து விட்டது மாம்பழம் பலாப்பழம் தென்னை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கரும்பு ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது நெல் பெற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இந்த தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது இதில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் அடுத்து ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும்.

  அதில் திருச்சியிலிருந்து சென்னைக்கு 326 கிலோ மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியுடன் 25 அடிக்கு ஒரு விவசாயி அமர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் இதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும்.

 கொரோனா தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தால் வறட்சியின் காரணமாக துன்பத்தில் 100 பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Monday, April 27, 2020

On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி  

வியாபாரிகள் எதிர்பை தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை ஜீ-கார்னருக்கு மாற்றப்பட்டது - சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது

கொரனா பாதிப்பை தொடர்ந்து 
திருச்சி காந்தி மார்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாததால் உடனடியாக 



மார்கெட்டை திருச்சி - சென்னை பை பாஸ் நெடுச்சாலையில் உள்ள பழைய பண்ணையில் தற்காலிக சந்தை இயங்கி வந்தது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், கொரோன விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. 

ஆனால் இதையும் மீறி மக்கள் தொடர்ந்து கூட்டமாக வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சந்தையை பால்பண்னையிலிருந்து சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது அறிவிப்பை வெளியிட்டது. 
இந்த அறிவிப்பு வெளியான உடனே திருச்சியில் காந்தி மார்கெட் வியாபாரிகள் சங்கங்களில்
 27சங்கங்கள் இணைத்து இதை ஏற்க முடியாது என கூறி 
காந்தி மார்கெட்டில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்
வரை காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில்  ஈடுப்பட போவதாக திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 
ஆனால்  வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் 
அமைச்சர் வெல்மண்டி நடராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஊரடங்கு முடியும் வரை அதாவது 3- ஆம் தேதி வரை பால்பண்ணையில் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 


ஆனால் அரியமங்கலம் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் இயங்கி வந்த பால்பண்ணை மொத்த காய்கறி வியாபாரிகள்  எதிர்ப்பினை தொடர்ந்து இன்று இரவு முதல் பொன்மலை ஜீ கார்னர் மைதானத்துக்கு மாற்றப்படும் எனவும், தினந்தோறும் இரவு 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செயல்படும். சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் இங்கு வரக்கூடாது. 


திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இதனையடுத்து இன்று இரவு மார்கெட் உடனடியாக பொன்மலை ஜீ. கார்னர் மைதானத்தில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  சில்லரை வியாபாரத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும் என கூறி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம்  முறையிட்டனர். 

 கர்நாடக . கேரளா, அந்திரா உள்ளிட்ட 
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் ஊட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  வந்த காய்கறிகளை லாரியை விட்டு இறக்காமல் நிறுத்தி வைத்தனர். சிறு விவசாயிகள் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்த காய்கறிகளையும் இறக்காமல் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


அதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி மற்றும் கோட்டை தாசில்தார் மோகன் ஆகியோர் தலைமையில்  பேச்சு  வார்த்தை நடைபெற்றது .இதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர்,  தமிழ்நாடுவணிகர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர்  பேச்சு  வார்த்தையில் ஈடுபட்டனர்.

 பேச்சுவார்த்தையில் மொத்த வியாபாரி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளை கணக்கெடுத்து உரிய முறையில்
நாளை முறைப்படி டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் சில்லறை வியாபாரமும் நடைபெறும் என முடிவு காணப்பட்டது.  


அதன்
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் சில்லரை வியாபாரிகளும் இன்று கடை போடலாம் என கூறியதையடுத்து லாரியிலிருந்து காய்கறிகள் இறக்கப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய துவங்கினர். இதனை தொடர்ந்து சில்லரை வியாபாரிகளும் வியாபாரத்தை துவங்கினர். 


இங்கு என்ன காரணத்திற்க்காக மாற்றப்பட்டதே அந்த சமூக இடைவேளை என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
துறையூர் அருகே கோட்டாத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில்  துப்புரவு பணியாளர்கள் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

   திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சித் தலைவர் திருமூர்த்தி அக்கிராமத்தில் உள்ள  துப்புறவு பணியாளர்கள் மற்றும்  நலிவடைந்தவர்கள் 20 பேருக்கு ரூபாய் 800 மதிப்புள்ள மளிகை பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார். 5 கிலோ அரிசி பருப்பு காய்கறிகள் ஒரு கிலோ கோழி இறைச்சி மசாலா பொடிகள் மிளகு சீரகம் முககவசம் சானிடைசர் சோப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரூபாய் 800 மதிப்புள்ள மளிகை பொருட்கள்  துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிவடைந்தவர்கள் 20 பேருக்கு  கோட்டாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமூர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மதிவதினிகுணசேகரன் துணைத் தலைவர் உஷாரவிக்குமார் ஊராட்சி செயலர் கற்பகச்செல்வி  மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே குடும்பதகராறில் கணவன், தாய் கண் முன்பு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவன், மாமியார் கைது
மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்த பாச தாய்
  
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சஞ்சீவிராஜ். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரக்ஷனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

ரக்ஷனா கர்ப்பிணியாக இருந்தநிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடைபெறுவது வழக்கம். ரக்ஷனா கணவரிடம் கோபித்துகொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். 

சஞ்சீவிராஜ் பைக்கில் மனைவியை அழைத்துசென்றுள்ளார். ரக்ஷனா வீட்டருகே மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் இருந்து கீழே இறங்கிய ரக்ஷனா அப்பகுதியில் இருந்த ஆழமான கிணற்றில் குதித்துள்ளார். 

நீச்சல் தெரியாத நிலையில் ரக்ஷனா உயிருக்கு போராடி உள்ளார்.   இதனை தூரத்தில் இருந்து பார்த்த ரக்ஷனாவின் தாய் தனலட்சுமி ஓடிவந்து மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனாலும் ரக்சனா தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அருகிலிருந்தவர்கள்  

கிணற்றில் குதித்து தனலட்சுமியை காப்பாற்றினர். முசிறி, துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரக்சனாவின் உயிரற்ற சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்த முசிறி போலீசார் இளம்பெண் இறப்புக்கு காரணமான சஞ்சீவிராஜ், இவரது தாய் பாப்பாத்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


மகளை காப்பாற்ற ஆழமான கிணற்றில் குதித்து போராடிய தாயின் பாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது.
On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மக்களே உஷார் ..! குழம்பில் மிதக்கும் புழுக்கள் ..!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக ஊராடங்கில் பல தளர்வுகள் அரசு செய்து இருக்கிறது, மளிகை பொருட்கள் தரமானதாகவும், விலை அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,
சமயபுரம் பகுதியில்  விற்கப்படும் மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர் , தற்பொழுது சமயபுரம் கடைவீதியில் இயங்கிவரும் ஸ்ரீ கிருஷ்ணா மளிகைகடை மளிகைகடையில் தரமற்ற மசால் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர்,  இன்று ஞயாற்று கிழமை என்பதால் அசைவ உணவு சமைப்பதற்காக  வங்கிவரப்பட்ட  மசால் தூள் பக்கெட்டை பயன்படுத்தி வைக்கப்பட்ட குழம்பில் புழுக்கள் மிதந்துள்ளது, அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், அதை பார்ப்பதற்கு முன்பே அந்த குழம்பை சிலர் சாப்பிட்டதாகவும் புழுக்கள் மித்தப்பதை பார்த்ததும் அதை வாந்தி எடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர், பிறகு அந்த குழம்பை சாக்கடையில் ஊற்றி விட்டதாக கூறினர்,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சர்ச்சையை ஏற்படுத்திய கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் சந்தை

திருச்சி ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி சார்ந்தவர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் கேள்வி ? விடை கிடைக்குமா?

அதிமுக வில் முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் கள்ளிக்குடி தலைமையில் தற்காலிகமாக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கள்ளிக்குடி சந்தையில் விமான நிலையத்திலிருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களை கண்காணிக்க கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது.

 தற்போது விமான போக்குவரத்து இல்லாததால் கள்ளிக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் தலைமையில் எதிர்க்கட்சியான மதிமுக இணைந்து விவசாயிகளுக்கான நேர்முக கொள்முதல் சந்தை என அதனை பொதுமக்கள் வாங்கி செல்ல சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதனைப்பற்றி தனியார் அறக்கட்டளை சார்பாக கூறுகையில்


*தமிழக அரசின் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கம். கொரானோவைக் காரணம் காட்டி தாங்கள் 27.04.2020 காலை 7 மணிக்கு கள்ளிக்குடி மார்க்கெட்டை சத்தமில்லாமல் துவங்குவதற்கு முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் என்கிற முறையில் ஏற்பாடுகள் செய்ததற்கு நன்றி.*

*மழையில்லை விளைச்சலில்லை விலையில்லை. இதுதான் தமிழக விவசாயிகளின் நிலை.*




*கொரானோ நோயின் காரணமாக லாக்டவுன், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அரசு போடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது விலை பொருளை கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு போய் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியுமா? நுகர்வோர் போய் காய்கறிகள் வாங்கி வர போக்குவரத்து வசதி இல்லை. மீறி அவர்களுடைய வாகனத்தில் செல்வது என்றால் எவ்வளவு கூடுதலாக பெட்ரோல் செலவாகும் என்று நுகர்வோர் யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். அதனால் மீண்டும் ஏதோ ஒரு வியாபாரிக்குத் தான் வியாபாரி கேட்கும் விலைக்கு விவசாயிகள் உற்பத்தி பொருளை விற்பனை செய்ய முடியும். அதனால் விவசாயிக்கு போக்குவரத்து செலவு, அலைச்சல், கூடுதல் வேலை நேரம் ஆகும். இதனால் விலை தான் கூடுமே தவிர நுகர்வோருக்கோ மற்றும் விவசாயிக்கோ எவ்வித இலாபமுமில்லை.*


*விவசாயிகளும் ஒரு மனிதர் அவருக்கும் உயிர் இருக்கிறது அவருக்கு நோய் தொற்று ஏற்படாது என்று நினைக்க வேண்டாம்.*
*எனவே விவசாயிகளிடம் அவரவர் பகுதியில் உள்ள வேளாண்மை துறை மூலமாக ஒரு நியாயமான விலையில் அரசே கொள்முதல் செய்து டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைக்கலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயப் பொருளுக்கு ஒரே மாதிரியான நியாயமான கொள்முதல் விலை விவசாயிக்கு கிடைக்கச் செய்யலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம். இதனால் அவரவர் பகுதியிலேயே நுகர்வோர் வாங்கி கொள்வார்கள். விலை வித்தியாசம் இருக்காது*

*கொரானோ காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பலர் குடியை மறந்து உள்ள சூழ்நிலையில் நிரந்தரமாக மதுவிலக்கை அமுல்படுத்தி டாஸ்மாக் ஊழியர்களைக் கொண்டு காய்கறிகள் கடையைத் திறக்கலாம்.*

*இவற்றைக் கருத்தில் கொண்டு முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் என்கிற முறையில் நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி. கே. பழனிச்சாமி அய்யா அவர்களிடம் பரிந்துரை செய்து அமுல்படுத்த ஆவண செய்யுமாறு பணிவடன் தங்களை கேட்டுக் கொள்வது* *கே.கே.மாரிமுத்து*
*மேனேஜிங் டிரஸ்டி*
*ஷாலோம் பவுண்டேஷன்ஸ் தொண்டு நிறுவனம்.* *துறையூர், திருச்சி.*
*செல் :90805 33539 / 99940 12601.*

*எனது கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் படித்துவிட்டு உடனே நமது தமிழக அரசின் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அவர்களின் வாட்ஸ்அப் நம்பர் 99941 45555 என்கிற நம்பருக்கு இக் கோரிக்கையை அனுப்பி வைக்கவும்.*
என தனியார் அறக்கட்டளை சார்பில் கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் என ஏற்பாடு செய்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது

Saturday, April 25, 2020

On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
கபசுரக் குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்!

திருச்சி அரசு சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்

திருச்சி

 சித்தர்கள் கண்டறிந்த கபசுரக் குடிநீரை தினமும் பருகினால் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பிற்குள்ளாவதைத் தடுக்கலாம் என சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருச்சி டாக்டர் அப்துல்கலாம் பொதுமக்கள் நலன் சங்கம் சார்பாக, வயலூர் ரோடு, குமரன் நகர், சிவன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் குறித்து பேசிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், கபசுரக் குடிநீர் என்பது சாதாரண மருந்து. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் கூறிய அருமருந்துகளில் ஒன்று. ஓலைச்சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மகத்துவம் புரிந்து தற்போது பல புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் அருமருந்தாக தற்போது தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது. நுரையீரல் தொடர்பான நோய்களான, சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவைக்கு இந்த மருந்து மிகவும் முக்கியமானது. இந்த கபசுரக் குடிநீரில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் உதவியது போன்று, கபசுரக் குடிநீர் அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். ஒன்று முதல் இரண்டு கிராம் கபசுரக் குடிநீர் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, வடிகட்டி பெரியவர்கள் 60 மிலி, குழந்தைகள் 30 மிலி காலை வேளைகளில் பருகலாம்.கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குடிநீரை பருகலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இந்தக் குடிநீர் உடலுக்கு நோய்த் தடுக்கும் மருந்தாக உள்ளது. இந்தக் குடிநீரினை ஆங்கில மருந்து உண்பவர்களும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மருந்து வெளிச்சந்தையில் 100 கிராம் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பல போலியானவையாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும் மருந்தினை பயன்படுத்தலாம் எனக் கூறினார்.கபசுர குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள், அப்துல் கலாம் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள் தலைமை சித்த மருத்துவர் காமராஜ்  டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.