Friday, May 08, 2020

On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி 


திருச்சியில்   10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகையில்


மது விற்பனை நேரம் தவிர 24 மணி நேரமும் இந்த மதுக்கடையில் காவல் துறை முழு ஒத்துழைப்புடன் டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மது விடுமுறை நாட்களிலும் மற்ற நாட்களிலும் 24 மணி நேரமும் விற்கப்படுகிறது சமீபத்தில் 15 நாட்களுக்கு முன்பு குடித்து குடித்து ஒருவர் இறந்துள்ளார். 

இதனைப்பற்றி நாங்கள் புகார் தெரிவித்தாலும் காவல்துறை டாஸ்மாக் அதிகாரி மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வதில்லை என்றும் மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் விற்பனை செய்தால் நெடுஞ்சாலை என்பதாலும் யாத்ரி நிவாஸ் அருகில் இருப்பதாலும் பல ஊர்களில் இருந்தும் பல இடங்களிலிருந்தும் மது அருந்த இங்கு வருகிறார்கள் இந்த கடையில் 24 மணி நேரமும் முதல் விற்பனை ஆவதால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்ற அச்சத்துடன் பெண்கள் ஒன்று கூடி கடையை திறக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது .

மேலும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் 
ஊரடங்கு காரணமாக
அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்ட நிலையில்  நேற்று முதல் மதுபான கடைகள் செயல்படத் துவங்கியது.

இந்நிலையில் இந்த அழகிரிபுரம் பகுதியில் மதுபான கடை10315
10409 திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் ஸ்ரீரங்கம்
வட்டாச்சியர் ஸ்ரீதர்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரைமுருகன்,  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் 1மாதம் பின்னர் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் கடையினை மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும்
என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கத்தின் கோரிக்கைகள்


 தாய்சங்கத்தின்  மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 08.05.2020 வெள்ளிகிழமை அன்று அரசு பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், இணைப்பு சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முன்னனி தோழர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து

 கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட தலைநகரில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் சமூக இடைவெளி விட்டு நின்று ஆட்சேபனையை தெரிவிப்பதுடன், அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்திட வேண்டும் என்றும் மேலும்


கோரிக்கைகள் 
                                       
பல்வேறு ஆண்டுகளாக போரடி பெற்ற உரிமைகளான அகவிலைப்படி 3 தவணை நிறுத்தம், சரண்டர் விடுப்பூதியம் நிறுத்தம் மற்றும் பி எப்  வட்டி விகிதம் குறைப்பு போன்ற அரசு பணியாளர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும்.

கொரோன நோய் தொற்று நடவடிக்கையில் பணிபுரிந்து வரும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும்.   மேலும் அனைத்து துறையிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்,  ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் மேல்நிலை தொட்டி காவலர்கள்,  தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும். 

மேலும் இவர்களுக்கு மாதாந்திர ஊதியம் நிலுவைஇன்றி வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.         

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக 44 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை,  சமூக பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.   எனவே *சமூகத்தை சீரழிக்க கூடிய மதுக்கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும். அங்கு பணியாற்றும் பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி, மாற்று பணி வழங்கிட வேண்டும்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்  மாநில மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
On Friday, May 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி
காவல்துறை வெளியிட்டுள்ள தற்போது விழிப்புணர்வு வீடியோ


ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசும் தொற்று வராமல் தடுக்க காவல்துறையினரையும் மருத்துவத் துறையினரும் வைத்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.


ஆனால் பொதுமக்கள் விழிப்புணர்வு இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் மார்க்கெட் மற்றும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இடைவெளியை கண்டுகொள்ளாமல் வெளியில் திரிந்து வருகின்றனர்.


பொதுமக்களுக்கு சமூக இடைவெளி முக கவசம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினர் ஒரு வீடியோ பதிவு தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

Thursday, May 07, 2020

On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பு ..


கொரோன நோய் தொற்று பரவி வரும் நிலையில் மக்களின் நலனுக்காக மதுக்கடைகள் மூடப்பட்டது, தற்பொழுது தமிழகத்தை சுற்றுயுள்ள  பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து வேறு மாநில எல்லைக்கு சென்று மது வாங்கும் நிலை ஏற்பட்டது, அதனை தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடை திறப்பதாக தமிழக அரசு கூறியது,
இன்று
சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கடைகளில் மது வாங்குவதற்கு மது பிரியர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல்
மது வாங்குவதற்கு வரிசையில் நின்றனர், மது வாங்குவதற்கு வரும்  மதுப் பிரியர்கள் காவலர்கள் கைகளை சுத்தம் செய்தும், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற கோரினர்,  காலை10 மணிக்கு 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டது. சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் அவர்களின் தலைமையில் உடல்நிலை சீராக உள்ளதா என சரிபார்த்து மது கொடுக்கப்பட்டது, உடல்நிலையில் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு மது கொடுக்கப்படவில்லை.
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 07

திருச்சியில் 
25வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வழங்கினார். 

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி 18-வது வார்டு மக்களுக்கு
25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி காவல்துறையில் 1986ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 35 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணி செய்து வந்தவர் முருகேசன் இவர் காவல்துறையில் எஸ் எஸ் ஐ என்ற பதவி வகித்து வந்தார்.

 இவரது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். திருச்சி கே கே நகர் காவல்நிலையத்தில் குற்றப் பிரிவில் வேலை பார்த்து வந்தார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக காவல்துறையினர் தொற்று பரவாமல் இருக்க அரசு விதிமுறைகளை பாதுகாக்க வேண்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் துறையினருக்கு மன அழுத்தம் வேலைப்பளு அதிகமாக காணப்பட்டு வருகிறது.

 திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென எஸ்எஸ்ஐ முருகேசன் அவர்களுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருதய நோயால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் நேற்று இரவு இவருக்கு தொற்று ஏதேனும் பரவி உள்ளதா என்பதற்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் காவல்துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் 36 பேருக்கு*
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை

இன்று 5 பேர் பாதிப்பு

மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்

திருச்சி மாவட்டத்தில் 57  பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .ஏற்கனவே 51 பேர் பூரண குணத்துடன் இல்லம் அனுப்பிவைக்கப்பட்டனர்

ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் 4,5 தேதிகளில் இங்கு வந்ததில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது

மீதமுள்ள 256 பேரை சோதனை செய்ததில் 253 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.அப்போது 3  பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது

இதேபோல் திருச்சி *மாவட்டத்தினை சேர்ந்த 1 நபருக்கு சேலத்திலும் மற்றொரு நபருக்கு கரூரிலும்  கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது

ஆக மொத்தம் இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளது
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 11 நபர்கள்,  அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த 9  நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 13 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள்,கரூர் மாவட்டத்தினை சேர்ந்த 1 நபர் என மொத்தம் 36  நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமுடன் உள்ளனர்
ஆகவே எல்லோரும் தனித்திரு, விலகியிரு,வீட்டிலிரு என்பதனை கடைப்பிடிக்க வேண்டும்.
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் முடிவை ரத்து செய்க!

தமிழக அரசுக்கு கோரிக்கை
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இந்த வேண்டுகோளை  நிராகரித்து விட்டு,  (07.05.2020) டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டிக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி பரிபூரண மதுவிலக்கை நிறைவேற்றுவது என்பது ‘அம்மா அரசின் கொள்கை’ என்று அறிவித்து வரும் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசு மதுபான வியாபாரத்தை மட்டுமே அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் கருதுவது வெட்கக் கேடானது.
“குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணைய் போல் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம்“ இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா.
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்காக தனது தோட்டத்தில் தென்னை மரங்களை அனைத்தையும் வெட்டி அகற்றினார் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈ.வெ.ரா.
அஇஅதிமுக அரசு கடந்த 17 ஆண்டுகளாக மதுபான வியாபாரத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ‘மதுக்குடியர்களை’ உருவாக்கி மனித வளத்தை உருக்குலைத்து வருகிறது .
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரானா நோய் பெருந்தொற்று பரவி மக்கள் உயிர்களை பறித்து வரும் நிலையில், அந்த ஆட்கொல்லி நோய் ஒரே நாளில் 527 பேர்களை தொற்றிப் பரவி விட்டது என்று அறிவிக்கும் அரசு, டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது ஆக்கபூர்வ சிந்திக்கும் திறனை இழந்து விட்டதன் அடையாளமாகும்
கோவிட் 19 நோய் பெருந்தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான நிதியை கேட்டுப் பெற இயலாத அரசு, அழுத்தம் கொடுத்து கேட்டால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாவோம் என அஞ்சி நடுங்கி அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி ரூபாய் 250 கோடி சுமையை , 40 நாட்களாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள் தலையில் ஏற்றியுள்ளது.
மக்கள் நலன் பேணுவதில் அக்கறை காட்டாத அரசியல்,  சுயநலக் கும்பல்  ஆதாயம் தேடி வருவதை  முதலமைச்சர் பொறுப்பில் உள்ள பொதுப் பணித்துறையில் வெளியாகும் ஊழல் புகார்கள் வெளிப்படுத்துகின்றன.
கொரானா தடுப்பு ஊரடங்கு காலத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5/=ஆயிரம் கோவிட் நிவாரண நிதி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரிக்கையைக் கூட பரிசீலிக்காத தமிழ்நாடு அரசு, ஏழை மக்கள் வீடுகளில் உள்ள குடும்பப் பெண்கள் தாலி உட்பட தட்டுமுட்டுச் சாமான்களை பறித்துக் கொள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க முடிவு செய்துள்ளது.
கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கும் தமிழ்நாடு அரசின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக மதுக்கடைகள் திறக்கும் உத்தரவை ரத்து செய்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
KC.பாண்டியன், R.நடராஜன், பா.லெனின் ஆகியோர் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போன்று DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் இல்லத்தில் குடும்பத்தினரோடு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தினார்கள்

Wednesday, May 06, 2020

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
*திருச்சிக்கு எச்சரிக்கை மணி.. உஷார்.* 

திருச்சி மாநகரில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதுதவிர கோயம்பேடு Source மூலமாக துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 
ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் ஒரு சிலருக்கு பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

 *_திருச்சி வாழ் மக்களே..!!_* 

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதே எனக்கருதி, கட்டுக்கடங்காமல் திரிந்தால், 
கொரோனா வார்டிலுள்ள கட்டில்களும் - நம்மை வரவேற்க காத்திருக்கின்றன.

சூழ்நிலையை உணர்ந்து,
நாமும் பாதுகாப்பாக இருப்போம்..
நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாத்திருப்போம்.

அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்