Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in , , ,    
ஈரோடு : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெருந்துறை கோட்டத்தில் பெருந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம், குன்னத்தூர், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் பழுதடைந்த மினகம்பங்கள், குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் ஏற்படும் பகுதிகள், தாழ்வாக செல்லும் மின்பாதைகள் தொடர்பான குறைபாடுகளை தபால் மூலமாகவோ அல்லது பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை 04294-240553 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 comments: