Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
கோவை அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் பலி

கோவை சின்னியம் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 29). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (4) என்ற மகள் உள்ளார். நாகராஜ் தனது மனைவி மாரியம்மாள், அவரது தங்கை சுப்புலட்சுமி, அவரது கணவர் மாசாண முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சின்னியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கோவை – சேலம் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரியம்மாளின் உறவினர்கள் அவரது சடலத்தை நடுரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியம்மாளின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: