Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by TAMIL NEWS TV in , , ,    
ஈரோடு சூரம்பட்டியில் தீ விபத்து; 7 வீடுகள் எரிந்து சாம்பல்

ஈரோடு சூரம்பட்டியில் உள்ள குமரன் வீதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது குடிசை வீட்டின் அருகே வரிசையாக குடிசை வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதில் சாந்தி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அவரது வீட்டில் பிடித்த தீ மள... மள...வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டேபிள் மற்றும் துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேதமதிப்பு உடனடியாக தெரிய வில்லை.
இந்த தீ விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: