Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by TAMIL NEWS TV in , , ,    
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியளவில் லக்காபுரம் நகராட்சி நகரிலிருந்து சோலார் புதூர் இந்திரா நகருக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
சோலார் அருகே சென்ற போது திருச்சியிலிருந்து ஈரோடு வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். விபத்து பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான தறிப்பட்டறை அதிபர் ராமசாமிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் கோவிந்தராஜிக்கு திருமணம் ஆகிவிட்டது.

0 comments: