Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by TAMIL NEWS TV in , , ,    
சத்தியமங்கலத்தில் 2 பேரை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க தீவிரம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகம் திம்பம் வனச் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் பணியில் இருந்த வனக்காவலர் க.கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதேபோன்று கடந்த ஜூன் 11–ந் தேதி திம்பம் 27–வது மலைப்பாதையில் தாளவாடி முகமது இலியாஸ் (வயது 25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார்.
இந்த தொடர் சம்பவத்தால் திம்பம் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, பாரி ஆகியோர் நேற்று சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விசாரணையில், தலமலையில் புறப்பட்ட அரசு பஸ் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு திம்பம் சோதனை சாவடிக்கு வந்தது. அப்போது, பூட்டி இருந்த சோதனைசாவடியை கிருஷ்ணன் திறந்து விட்டார்.
அதன் பிறகு, சோதனைச் சாவடியை பூட்டி விட்டு அப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கிருஷணன் மீது பாய்ந்தது. இதனால் தப்பிக்க ஓடிய கிருஷ்ணனை சிறுத்தை கடித்துக் கொன்றது. பின்னர், உடலை 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது தெரியவந்தது.
மனிதரை கொன்று பழகிய சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். முதற் கட்டமாக, சத்தியில் இருந்து 2 இரும்புகூண்டுகள் திம்பம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் நேற்று கூண்டு வைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். கள இணை இயக்குநர்களின் ஆலோசனையின்படி நீர்நிலை மற்றும் சிறுத்தையின் வழித்தடத்தில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
கூண்டின் உட்புறத்தில் ஆடு மற்றும் நாய் கட்டப்பட்டுள்ளது. ஆட்டை தின்பதற்காக வரும் சிறுத்தை கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளும்.

0 comments: