Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by TAMIL NEWS TV in , , ,    
ஈரோடு அருகே இளம்பெண் கொலை வழக்கில் காதலன் கைது

ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (வயது 22),
ஈரோட்டில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது இவருக்கும் ஈரோட்டை அடுத்த சொட்டையம் பாளையத்தை சேர்ந்த ரகுநாத் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரகுநாத் சத்ய பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சத்யபிரியா மனு கொடுத்தார். இந்த நிலையில் இது குறித்து நியாயம் கேட்பதற்காக சத்யபிரியா தனது காதலன் ரகுநாத்தின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யா பிரியா வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய பிரியாவை கொலை செய்தததாக ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சத்யபிரியாவின் காதலன் ரகுநாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.

0 comments: