Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by TAMIL NEWS TV in , , ,    
சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மாணவ–மாணவிகள் இன்று உண்ணாவிரதம்
ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 1400 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி நீண்ட காலமாக மாணவர்களும், பேராசிரியர்களும் போராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி கேட்டை இழுத்து பூட்டு போட்டு மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி கல்லூரி முன்பு மாணவ – மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

0 comments: