Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Unknown in , ,    




திருப்பூர், ஜூலை. 20-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு  சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்குவதும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமான தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர்  பஸ் ஸ்டாப்பில்   நடந்தது.  மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார்.தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே தனித்து நின்று மாபெரும் வெற்றி பெற்றவர் அம்மா. மக்களோடு நான் மக்களுக்காக நான், என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை நம்பி தனித்து நின்று பிரச்சாராம் மேற்கொண்டார். அம்மா அவர்களின் திட்டங்களை எல்லாம் அங்கீகரிக்கும் வகையில், ஒரு மகத்தான வெற்றியை தந்தீர்கள். இது இமாலய சாதனை. இதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை.
 இன்று உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலே, விலையில்லா 20 கிலோ அரிசி திட்டத்தை 1.80 கோடி ரேசன் கார்டு தாரர்களுக்கும் வழங்கி வருகிறார். முதியோர்களுக்கெல்லாம் ஒஇவூதிய தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. வீட்டிலே இருக்கிற பெண்களுக்கு விலையில்லா  மிக்சி, கிரைண்டர், பேன். வீடில்லாதவர்களுக்கு பசுமை வீடுகள். கிராம புற மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள்; குடும்பத்தில் இருக்கிற அனைவருக்கும் மருத்துவக்காப்பீட்டு திட்ட்டம்; வருவாய் துறை மூலம் மக்கள் குறைகளை தீர்க்கும் அம்மா திட்டம். என உன்னதமான திட்டங்களை அளித்ததால் தான் அம்மா அவர்களுக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தந்துள்ளார்கள்.
 கடந்த 5 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு நல்லத்தான திட்டங்கள் எதையும் தரவில்லை. அவர்கள் குடும்பம் பயன்பெருவதர்கான திட்டங்களையே தீட்டினார்கள். 
தமிழர்கள் பிரச்சினைகளான கச்சத்தீவு பிரச்சினை, முல்லை பெரியார் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினைகளில் தி.மு.க., ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முல்லை பெரியார் பிரச்சினையில் 142 அடி அணையில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்தவர் அம்மா.
 இந்த வெற்றியை பெற்று தந்தவர் தமிழக முதல்வர் அம்மா அவர்கள். ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தமிழக மக்களுக்காக அம்மா குரல் கொடுத்து வருகிறார். ஆனால் தி.மு.க.வினர் எதுவுமே செய்யாமல் சட்டசபையில் வெளிநடப்பு தான் செய்கிறார்கள் ; மக்களுக்காக அறிக்கை விடும் கருணாநிதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தமிழர்கள் பிரச்சினையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தவிர எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை. தமிழக மக்கள் அம்மாவின் அதி.மு.க., வை தவிர எந்த கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அந்தளவுக்கு அம்மா திட்டங்கள் தந்து வருகிறார்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு 14 வகையான விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறார். 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தூகை வழங்கி வருகிறார். இப்படி பல திட்டங்களை தொடர்ந்து அளித்து கொண்டிருக்கிறார். 
 திருப்பூரில் கடந்த ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதை மாற்றி மின்வெட்டிலாத மாநிலமாக தமிழகத்தை அம்மா உருவாக்கி உள்ளார். சாய சலவை பிரச்சினை தீர்க்க 200 கோடி வட்டியில்ல கடன் அளித்து தொழிலையும் தொழிலாளர்களையும் காப்பாற்றியவர் அம்மா. திருப்பூர் பெயரளவுக்கு மாநகராட்சியாக தி.மு.கவினர் அறிவித்தனர். ஆனால் அம்மா அவர்கள் நகர எல்லையை விரிவு படுத்தி 320 கோடி ரூபாய் வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார். 2, 3 வது குடிநீர் திட்டம் தந்த அம்மா அவர்கள் 4 வது குடிநீர் திட்டம் கொண்டு வர இருக்கிறார். இப்படி மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் உழைக்கும் அம்மா அவ அர்களுக்கு நீங்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசியதாவது:
33 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னால் நீதி மன்றத்தில் போராடி 142 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதற்கு நடவடிக்கை எடுத்தவர் அம்மா அவர்கள் தான் என்று அனைவருக்கும் தெரியும். பாசத்தளைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் கேளிக்கைகளை பார்க்க 3 மணி நேரம் உட்கார்ந்து ரசித்த கருணாநிதி; செம்மொழி மாநாட்டில் 7 மணி நேரம் உட்கார்ந்திருந்த கருணாநிதி சுனாமி வந்தபொது முதுகு வலி என்கிறார்.
 அம்மா அவர்கள் தான் சட்டமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்றி வேட்டிக்கு தடை விதிப்பேன் என்று கூறிய கிளப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தவர் அம்மா அவர்கள். தமிழர்கள் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுவதும் அம்மா தான். தமிழகத்தின் வருமானத்தை பெருக்குவதும் அம்மா தான். அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. 
ஆட்சி பொறுப்பேற்ற  நாளிலிருந்து இன்று வரை மக்களின் நலன் மட்டுமே அம்மா சிந்தனையிளிருக்கிறது.
 ஒரு சில வீடுகளில் கணவன் மனைவியை அடிப்பான்; மனைவி உடனே கோபித்து  கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவாள். இன்னும் சில வீடுகளில் மனைவி கணவனை அடிப்பாள், ஆனால் எந்த கணவனும் தாய் வீட்டுக்கு செல்ல மாட்டான். அப்படி பாதிப்புக்குள்ளான கணவன் மார்கள் செல்லும் இடம் அம்மா உணவகம் தான். அம்மா உணவகத்தில் மலிவு விலையில் தரமான உணவு கிடைக்கிறது.
மாநகராட்சி பகுதியில் 322 கோடி ரூபாய் அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிப்படையான நல்ல நிர்வாகத்தை அம்மா நமக்கு தந்திருக்கிறார் .இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
இந்த கூட்டத்தில், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலளார் விஜயகுமார், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணிம்ன், தம்பி மனோகரன், தங்கமுத்து, பி.கே.முத்து, வக்கீல் எம்.மணிகண்டன், சிட்டி பழனிசாமி, ஹரிஹரசுதன், கலைமகள் கோபால்சாமி, கவுன்சிலர்கள் சுஜாதா சின்னசாமி, உமா மகேஸ்வரி, வேலம்பாளையம் அய்யாசாமி,  தேவராஜ்,தனபால், பி.லோகநாதன், கோகுல், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: