Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
nazriya_anushka_samantha001நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நஸ்ரியா நசீம்.
இவர் முன்னணி நடிகைகளின் ஃபேஸ்புக் கணக்குகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறாராம்.
நடிகை அனுஷ்கா 2007 ஆம் ஆண்டு தனக்கான ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கி இதுவரை 59 லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
அதேபோல் நடிகை சமந்தா கடந்த 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திற்கு இதுவரை 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
ஆனால், நஸ்ரியா நசீம் கடந்த 2012ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கினார்.
ஆரம்பித்த இரண்டு வருடத்திற்குள் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்திருக்கின்றனர்.
அதிலும் அம்மணி கூடிய விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார்.
ஆனாலும் மலையாள பெண்குட்டிக்கு ரசிகர்கள் கூட்டம் அள்ளுது…

0 comments: